Tuesday, April 12, 2011

ஒளி மிகு தமிழம் ஒளிர முதல் அடி உங்களுடையதாக இருக்கட்டும் - குரு

அன்புடையீர்., வரும் தமிழக சட்டசபை தேர்தலுக்குப்பின், வரும் ஆட்சி எப்படி அமைய வேண்டும் என்பதைவிட, எப்படிப்பட்டவர்கள் ஆட்சி தமிழகத்து நல்லது என தயவு செய்து ஆழமாக சிந்திப்பீர்..! அதற்கேற்ப ஓட்டை பயன்படுத்துவீர்...!!!

இப்போதைய தி.மு.க. கழக ஆட்சி வெறும் இலவசங்களை நம்பி களத்தில் இறங்கி உள்ளது. இதையே கடந்த கால சாதனையாக கூறி மகிழ்கிறது.இது சாதனையா? வேதனையா? கல்வி அறிவற்ற பாமரர்களும் விபரீதம் அறியாமல் இலவசங்களுக்கு மயங்கி, தங்கள் வாக்கை அடகு வைத்து, தமிகழத்தையும் அடகு வைக்கிறார்கள்.

இலவ்ச - தொலைகாட்சி பெட்டி, மின் மோட்டார்கள், நிலங்கள், காப்பீடு என்று போய், மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாவரைக்கும் மிஷின்,(Grinder), மிக்ஸி, வாசிங் மெஷின், ஃப்ரிட்ஜ் எல்லாம் தருவோம் என் தி.மு.கவும்.,

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நலிந்தவருக்கு, 4  ஆடுகளும், மாடுகளும் கால்நடை வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையிலும், ரேஷன் கார்டு பயனாளிகள் அனைவருக்கும் 20 கிலோ அரிசியும், நலிந்தவரிகளின் திருமணத்துக்கு,  4 கிராம் தங்கத்தாலி  மற்றும் ரூ. 50000 இலவசமாக,தரப்படும் என்றும் அ.தி,மு.கவும் தமிழக மக்களை மூளை சலவை செய்கின்றனர்.

இன்றைய நிலையில், தமிழக களஞ்சியம் காலி. கஜானவும் சுரண்டப்பட்டுவிட்ட்து. மேலும்,  மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பு வரைக்கும் சென்று கடனை, தமிழகம் வாங்கி விட்டது. இனி இந்த 2 கழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகம் சந்திக்கப் போவது என்னமோ அழிவு என்பது மட்டும் நிச்சயம்.

ஏன் இந்த இரு கழகத்தை மட்டுமே  மாற்றி மாற்றி ஆட்சியில் அமர்த்த வேண்டும். இலவசம் எத்தனை நாளைக்கு தந்து கொண்டே இருக்க முடியும்? கடைசி ஏழை இருக்கும் வரை இலவசம் தொடரும் என்று கலைஞ்ர் முழக்கம் இடுகிறாரே. இது சாத்தியமா? கடைசி ஏழை வரைக்கும் இலவசம் கொடுத்தால், வறுமை போய் விடுமா? .உண்மையில் இது இவருக்கு தமிழகத்தின் மேலுள்ள வளர்ச்சியில் அக்கறையா? பதவி சுகம், அதிகாரம் தரும் போதை மயக்கம் போய் விடக் கூடாது என்ற ஆற்றாமையா?   

அதிமுகவும் இந்த வரிசையில் தானே உள்ளது....தயவு செய்து சிந்திப்பீர் என இதையெல்லாம் உங்களுக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் நீங்கள் சொல்லலாமே..!!!

உ.பி, & கர்நாடகாவைத் தவிர, இன்றைய மாற்று எதிர்க்கட்சி ரொம்ப திறமையாக இல்லாவிட்டாலும், தமிழகம் போல் எந்த வளர்ச்சிப்பணியும் பெரிய அளவில் நடைபெறாமல் சூரையாடப்படவில்லையே என்ற உண்மையை நீங்கள் நம்பினால், இதையெல்லாம் உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் சொல்லலாமே..!!!

குஜராத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு இலவசம் இல்லை. முதலீடுகள் பெருகுகின்றன். வளர்ச்சி திட்டம் பெருமளவில் செயல்படுத்தப்படுகின்றன. தடையற்ற மின்சாரம். இந்தியாவின் முன்மாதிரியான ஒரு மாநிலமாக திகழ்கிறது.. பஞ்சாபிலும் இதே நிலைதான். 

நான் இந்த கட்சிக்கு என்று ஒரு சார்பாக ஒட்டு போடசொல்லி கேட்கவில்லை. ஆனால், இரு கழகத்தையும்  தவிர்த்து, உண்மையிலேயே ஓரளவு சுமாரனவர்களாகப் பார்த்து அவர்களுக்கு உங்கள் வாக்கைப் பயன்படுத்தலாமே என்று நீங்கள் உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு சொல்லாமே..அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை என்று சொன்னால், இருக்கிறது இந்த கட்சி, இந்த சின்னம்  என்று அவர்களுக்கு சொல்லி புரிய வைக்க நீங்கள் நாட்டுக்காக செய்யும் ஒரு தொண்டாய் இதை செய்யலாமே.

அரசியல் நமக்கு வேண்டாம். ஊழலும், லஞ்ச லாவண்யமும், சுயநலமும் ஓங்கி புரையோடிபோய்விட்ட அரசியல் சாக்கடையை சுத்தம் பண்ணுவது என்பது முடியக்கூடிய காரியமா? என ஒவ்வொருவரும் எனக்கென்ன வந்தது? யாரும் யாரையும் மாத்த முடியாது என்று இருந்தால், என்றுதான் இதற்கு விடிவுதான் எப்போது?  பொறுப்பற்ற முறையில் அலட்சியமாய் இருப்பதும் நாட்டுக்கு செய்யும் பெரும் துரோகம் அல்லவா? அறியாதவர்களுக்கு, அறிந்தவர்கள் புரியவைக்கப்போவதுதான் எப்போது? கற்றதனால் ஆன பயந்தான் என்ன? எல்லோரும் இதேபோல் முன்பு பல தியாகிகள் நினைத்திருந்தால்,இன்று சுதந்தர பாரதம் மலர்ந்திருக்குமா? மலர்ந்த பாரதம் வாடுவதினால், உண்மையான தியாகிகளின் முயற்சி அனைத்தும் வியர்த்தம் ஆவதற்கு நாம் உடந்தையாய் இருக்கலாமா?

எல்லாக் கொள்ளிக்கட்டையும் ஒன்றுதான் என்று இல்லாமல், எரியும் கொள்ளிக்கட்டையில், அதிகம் பாதிப்பு இல்லாத கொள்ளிக்கட்டை எது என இப்போதைக்கு பார்த்து, நம் தமிழகத்துக்கு நல்லது செய்ய எத்தனிப்போம். உங்கள் வாக்கை மட்டுமல்ல உங்களைச் சுற்றி உள்ளவர்களும் அவ்வாறே செய்ய நீங்கள் ஓரளவேனும் ஒரு அடி எடுத்து வைத்தால் அதுவே புரையோடிப்போன சீழ் மேலும் மோசமாகாமலாவது இருக்க.,  இன்றைய கால கட்டத்துக்கு செய்யும் ஒரு சிறு முதல் உதவியாகும். காலப்போக்கில் பொறுப்புள்ள ஒவ்வொரு பிரஜையாலும், பொறுப்பற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க, முதல் புள்ளியை நீங்கள் எடுத்து வைப்பதாக இருக்கட்டும்...

இலவசங்கள் வேண்டாம், நாட்டின் இறையாண்மையை அடகு வைக்க வேண்டாம். 

ஒளிமிகுதமிழம்ஒளிரமுதல்அடிஎடுத்துவைங்கள்.பொறுப்புள்ள ஒவ்வொரு இந்தியனாலும் பாரதமும் தானாக உலக அரங்கில் முன்னிற்கும். 

பல பணிகள் உங்களுக்கு, உண்மைதான். ஆனால் அதை நாம் வேறு நாட்டிலா இருந்துகொண்டு    செய்கிறோம். நம் வீட்டில் ஒரு பிரச்சனை என்றால், உடனே எல்லாவற்றையும் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு, இதில் கவனம் செலுத்துவதுபோல்,இதையும் நாட்டுக்காக செய்ய முன்வரலாம். அதுவும் முடியவில்லையா? குறைந்த பட்சம் இந்த மெயிலையாவது உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் forward பண்ணுங்கள். ஒரு பொறி போதும்..விடியல் ஏற்பட !!!

ஆகவே., தயவு செய்து இக்கட்டுரையின் முதல் பாராவை மீண்டும் ஒரு முறை படியுங்கள்.

எழுத்தாக்கம்
குருமூர்த்தி

No comments:

Post a Comment