Thursday, December 9, 2010

ஊழலை மறைக்க இலவசங்கள் ஊழல் ஒழிப்பு நாளில் ஆவேசம்

Dinamalar Videos - Breaking News videos, Live News Videos, News Videos Online, Latest Video

மானம் கெட்ட முதல்வர். நமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்

From Dinamalar Article

நமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்
*****************************************************
மனோகரா படத்தில் கொடூரமான வில்லி கேரக்டருக்கு வசந்த சேனை என்று பெயர் சூட்டிய முதல்வர் கருணாநிதி, தனது இளைஞர் படத்தில் வில்லியாக நடிக்கும் நமீதாவுக்கு சேனை என்று பெயரிட்டிருக்கிறார். டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவின் 50வது படம் இளைஞன். முதல்வர் கருணாநிதி கதை, வசனத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் பொங்கல் தினத்தில் ரீலிஸ் ஆகவிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் முதல்வர் கருணாநிதி கருணாநிதி கலந்து 
கொண்டு இசை குறுந்தகடை வெளியிட்டார்.

இளைஞனை பார்த்து விட்டு "தமிழ் படம் எடுப்பேன்னு பார்த்தா ஒரு இங்கிலீஷ் படமே எடுத்திருக்கியே!" என்று சுரேஷ் கிருஷ்ணாவை முதல்வர் பாராட்டியிருக்கிறார். அந்த சந்தோஷத்தில் இருந்து மீளான அவர் இளைஞன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். படத்தின் கதைக்களம் கப்பல் கட்டும் துறைமுகமா இருந்தா நல்லாயிருக்கும்னு சொன்னார் கலைஞர். நிறைய செலவாகுமே என்றேன். பக்கத்திலிருந்த தயாரிப்பாளர் மார்ட்டின் செலவு ஒரு பிரச்சனையே இல்லை. கலைஞர் என்ன நினைக்கிறாரோ அது ஸ்கீரின்ல வரணும்னு சொன்னார். அப்புறம் என்ன? இந்த படம் இங்கிலீஷ் படம் மாதிரி பிரமாண்டமா வந்திருக்கு. பென்ஹர் மாதிரி படங்கள் எடுத்த ஸ்டுடியோவுல இளைஞன் எடுத்திருக்கோம். இங்கிருந்து எங்களோட வந்திருந்த டெக்னீஷியன்கள் அந்த ஸ்டுடியோவுல கால் வச்சதுமே கண் கலங்கிட்டாங்க, என்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.

கடைசி படம் ஓடவில்லை என்பதால் விரக்தியில் இருந்த நேரத்தில்தான் நமீதாவை இந்த படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார்கள். வில்லி கேரக்டர் என்பதும் சம்மதிக்காமல் இழுத்தடித்த நமீதாவை முதல்வர் கருணாநிதியே போன் செய்து அழைத்திருக்கிறார். முதல்வரின் அழைப்பென்றால் சும்மாவா.... மறு பேச்சேதும் பேசாமல் டபுள் ஓ.கே. சொல்லி களத்தில் இறங்கிவிட்டாராம் நமீ. இளைஞனில் நமீதாவின் கேரக்டர் பெயர் சேனை. மனோகரா படத்தில் வசந்த சேனை என்ற கொடூரமான வில்லியை காட்டிய கலைஞர், அந்த தாக்கத்தில்தான் நமீதா கேரக்டருக்கு இப்படியொரு பெயரை முதல்வர் வைத்தார் என்பது கூடுதல் தகவல்

Wednesday, December 1, 2010

தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி

தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி 


கருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் 


பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம். 
*1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை. இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன். இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி. 


பக்கம் 81,82 ல்.............. 
*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கி.மீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம். 


இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்................ 
* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன். 


பக்கம் 92,93 ல்.............................. 
* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார். 


இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார். 


இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 


1. கருணாநிதியின் கோபாலபுரம் வீடு 
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம் 
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு 
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது) 
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம் 
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம் 
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம் 
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம் 
9. ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு 
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி 
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம் 
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்) 
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி) 
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு) 
15. தயாநிதி மாறன் வீடு 
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை 
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு 
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில் 
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை 
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில் 
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை 
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம் 
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம் 
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி 
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக 
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது 
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை 
29. அந்தமான் தீவின் நிலங்கள் 
30. அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள் 
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு 
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை 
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில் 
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது 
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு 
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள் 
37. செல்வம் வீடு 
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள் 
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை. 
40. முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள் 
41. செல்வம் வீடு-பெங்களுர் 
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர் 
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை 
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை. 
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள் 
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை. 
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர் 
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள். 
49 .Additional properties after semmuzi coimbatore farm house 
50. Broke bond land in coimbatore (given to rental for RMKV silks) extra extra extra extra இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை. 


திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில். 


வாழ்க தமிழ்நாடு. 


வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள்......

Friday, November 26, 2010

நிரா ராடியா உரையாடல் விவகாரத்தில் சி.பி.ஐ., நடவடிக்கை தேவை': ஜெ



ஸ்பெக்ட்ரம்' ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கியவர்களுக்கும், அரசியல் வியாபாரியும், அதிகார மையத்திடம் அதிக செல்வாக்கு பெற்றவருமான நிரா ராடியாவுக்கும் இடையே நடைபெற்ற முக்கியமான தொடர் உரையாடல் காட்சிகள், குறிப்பாக தமிழக மக்களால் அவ்வளவாக கவனிக்கப்படவில்லை. நிரா ராடியாவின் தவறான போக்கை உணர்ந்த வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அப்பொழுதே அவரை கண்காணித்தன. மிகப்பெரிய நிறுவனங்களுக்கு சலுகைகள் செய்து, அதன் மூலம் சட்ட விரோதமான முறையில் அரசியல்வாதிகளுக்கு வரும் பணத்தின் பாதையை ஆராயும் முயற்சியில் ஈடுபட்டு, அதை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் நிரா ராடியாவின் போன், மொபைல் போன்களின் உரையாடல்களை குறிப்பிட்ட சில நாட்களுக்கு வருமான வரித்துறை பதிவு செய்தது. 500 மணி நேரத்திற்கும் மேலாக போன் உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன. இதில், 15 நிமிடங்களுக்கும் குறைவான உரையாடலைத் தான் ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன. இந்த உரையாடல், முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினரின் சுயரூபத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அம்பலப்படுத்தியுள்ளது.


ஊடகங்களால் வெளியிடப்பட்ட இந்த உரையாடல் பதிவு, இரண்டாவது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவி ஏற்கும் சமயத்தில், தி.மு.க., உறுப்பினர்களுக்காக அல்ல. தன் மிகப் பெரிய குடும்பத்தைச் சார்ந்த பல்வேறு உறுப்பினர்களின் வருவாயை பெருக்கும் நோக்கத்தில், மத்திய அரசிடமிருந்து வளம் கொழிக்கும் துறைகளை பெறுவதற்காக கருணாநிதியால் நடத்தப்பட்ட பேரத்துடன் தொடர்புடையது. நிரா ராடியாவிற்கும், கருணாநிதி குடும்பத்திற்கும், காங்கிரஸ் தலைமைக்கும் இடைத் தரகராக வெளிப்படையாக செயல்பட்ட மூத்த பத்திரிகையாளர் வீர்சங்விக்கும் இடையே நடத்தப்பட்ட உரையாடல் தமிழகத்தில் உள்ள கூட்டணிக் கட்சியை, மத்திய காங்கிரஸ் தலைமை எந்த அளவுக்கு கேவலமாக நடத்தி இருக்கிறது என்பதை காட்டுகிறது. தி.மு.க., என்பது கருணாநிதியின் குடும்பம் மட்டும் தான் என்பதையும், இந்தக் குடும்பத்திலுள்ள பல நபர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டாலும் அதிகார வெறியும், பணத்தின் மீதான பேராசையும் தான் இவர்களை இன்னமும் ஒன்றாக இணைத்து வைத்துள்ளது என்பதையும் இந்த பதிவு படம் பிடித்துக் காட்டுகிறது.


இந்த உரையாடல் பதிவுகள் வருமான வரித்துறையின் வசம் உள்ளன. மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்க இயக்கத்திடமும் இந்த உரையாடல் பதிவுகள் உள்ளன. இந்த அமைப்புகள் எல்லாம் உண்மையிலேயே சுதந்திரமாக செயல் படுகிறது என்றால், பொது வாழ்வில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதாக கூறிக் கொள்ளும் நபர்களை விசாரிப்பதில் எந்த நிர்பந்தமும் மேற்படி அமைப்புகளுக்கு இல்லையென்றால், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
From Dinamalar







Friday, October 15, 2010

மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?' "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?' அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!'



"என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கை யிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!'



"இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா?

Saturday, September 4, 2010

முதல்வர் விழாக்கள்: மாற்றம் வருமா?








ஓட்டம் ஓடி உப்பு வாங்கி வாடா என்றால் ஒரு நொடியில் வாங்கி வந்து விடுவான் ! அப்படிச் செய்யாமல் அந்த வீட்டில் உள்ள குடு குடு 87 வயது கிழவரின் கையில பத்து காசினை கொடுத்தார்கள் ...கிழவரை தூக்கி ஒரு பல்லக்கில் வைத்தார்கள் ! பல்லக்கினை ஒரு பத்துபேர் சேர்ந்து தூக்கினார்கள் ! மேல தாளங்களை முழங்கினார்கள் ! கூத்தும் கும்மாளமுமாக ஒரு பத்துமைல் தூரம் கிழவரை தூக்கிச் சென்று உப்பு வாங்கி வந்தார்கள் ! இதனைப் பார்த்த மக்கள் என்னமா கிழவர் இன்னும் குடும்பத்துக்கு உழைக்கிறான் என்று பெருமையாக பேசிக்கொண்டார்கள் ! இப்படித்தான் கருணாநிதி இன்று நாட்டுக்கு உழைக்கிறார் ! வயதோ 87 .... ஒன்றுக்கு இரண்டு மனைவிகள்...உபத்திரவத்திற்கு கணக்கு வழக்கு இல்லாத பிள்ளை குட்டிகள் ...கதை வசனம் சினிமா கூத்து கும்மாளம் பாராட்டுக் கூட்டம் துதிபாடிகளின் சந்திப்பு ஏகப்பட்ட தொழில் ..சட்ட விரோத ஊழல் பேரங்கள்...இதுக்கும் மேல கட்சி அப்புறம் அரசியல். இந்த நிலையில இந்த ஆளு முதலமைச்சரா வேலை செய்கிறார் என்று நம்புகிறீர்களா ?..இந்த லட்சணத்துல ஒரு துணை முதலமைச்சர் ..அவரு எப்பவும் இவர தாங்கிகிட்டேதான் நிக்கிறாரு ! வேலை செய்வதாக தெரியல ! அப்புறம் 1008 எடுபிடிகள் ...அவுங்க அப்பன் வீட்டு காசிலிருந்து அல்ல ... எல்லாம் ஏழை மக்களின் காசு ! வஞ்சிக்கப் பட்ட பாமர ஜீவன்களின் ரத்தம் !!!
Comments from one dinamalar வாசகர்

Saturday, May 22, 2010

தமிழக பொதுத்துறை நிறுவனங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் பாழ்

Dinamalar Article ( மே 22,2010,23:50 IST)
*************************************************
ஓட்டு வங்கி அரசியல் என்ற நிலையில் இருந்து ஜனநாயகம் விடுபடாத வரை, பொதுமக்களுக்கு முழுமையான அளவில் நன்மை செய்கிற அரசுகள் அமைவது மிகவும் கடினம் என்ற உண்மையை பறைசாற்றும் வகையில், தமிழக அரசின் நிதி செயல்பாடுகள் மீதான மத்திய கணக் காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை அமைந் துள்ளது. குறிப்பாக, மின்துறை, போக்குவரத்து, சர்க்கரை ஆலைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக அமைந்துள்ளதும், அரசின் வருவாயில் பெரும்பகுதி அரசு ஊழியர்களின் ஊதியத் திற்கும், நிர்வாக செலவுகளுக்குமே செல்வதும் தெரியவந்துள்ளது.


கடந்த 2009 மார்ச் மாதத்துடன் முடிந்த ஆண்டிற்கான நிதிக் கணக்குகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை ஆய்வு செய்த இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை, அரசு நிர்வாகம், நிதி பயன்பாடுகளிலும், ஒதுக்கீடுகளிலும், திட்டமிடுவதிலும் எந்தளவிற்கு அலட்சியமாக இருந்துள்ளது என் கிற அதிர்ச்சி தகவல்களை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகளின் நிர்வாக செலவின ஒதுக்கீடுகளை தணிக்கை செய்து ஆய்வுக்கு சமர்ப்பிக்கும் பணியை மத்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை செய்து வருகிறது. இதன் மூலம் அந்தந்த மாநிலங் களின் தேவை, அங்குள்ள பொதுத் துறை நிறுவனங்களின் செயல் பாடு, அரசின் செயல்பாடு, செலவினங்கள், திட்டமிடுதல், திட்டம் சாரா செலவினங்கள், திருப்பியளிக்கப்பட்ட நிதி ஆகியவை குறித்து தெரிந்து கொள்ள முடியும். இந்த தணிக்கை அறிக்கைகள், குறிப்பிட்ட ஆண்டிற்கு அடுத்த ஆண்டே தெரிய வரும். இந்த அறிக்கைகள், பட்ஜெட் கூட்டத் தொடரின் போது சமர்ப்பிக்கப் படும்.


இது போன்ற மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கை இந்த ஆண்டு, சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், பொருளாதார வல்லுனர் களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அறிக்கை மூன்று அத்தியாயங்களை கொண் டுள்ளது. நிதி நிலை ஒழுக்க முறை; திட்டம் சாரா செலவினத்தை குறைக்க வேண்டியதன் தேவை; அரசு முதலீடுகளின் மீதான ஆய்வு; திட்டங்களை முடிப்பதில் காலதாமதம்; அதிகபட்ச கடன் வரையறை; நிதி மேலாண்மை மற்றும் பட்ஜெட் திட்ட கட்டுப்பாடு உள் ளிட்ட பல்வேறு தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. திட்டம் சாரா செலவுகளையும், வருவாய் தராத செலவினங்களையும் தவிர்க்க தமிழக அரசு, சரியான நடவடிக்கை எதுவும் மேற் கொள்ளவில்லை என்பதை, அறிக் கையின் மூலம் அறிய முடிகிறது. அது போல், கடன் நிலை; வரவு - செலவு திட்டம் சாரா கடன் பொறுப்புகள்; ரொக்க கையிருப்பு மேலாண்மை போன்றவைகளும் சரி வர கையாளப்படவில்லை.


கடந்த 2005 - 06ம் ஆண்டில், தமிழகத்தில் மிகை வருவாய் இருந்தது. இதை தக்க வைக்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கவில்லை. மாறாக, சமூக, பொருளாதாரப் பணிகளுக்காக அதிக நிதி ஒதுக்கி வீணடித்ததுடன், வருவாய் வரவினங்களில் கவனம் செலுத்தாமலும் அரசு கோட்டை விட்டுள்ளது. குறிப்பாக, மொத்த செலவினத் தில் திட்டம் சாரா செலவினம் மட்டும் 80.33 சதவீதமாக இருந்தது. இதில், சம்பளங்கள், ஓய்வூதியம், வட்டி செலுத்துதல், ஊக்க உதவிகளுக்காக மட்டும் அரசு ஒதுக்கியது 78.44 சதவீதம். அரசு கழகங்கள், ஊரக வங்கிகள், கூட்டு பங்கு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் அரசு செய்திருந்த முதலீட்டிலிருந்து கடந்த மூன்றாண்டுகளாக அரை சதவீத வருமானமே கிடைத்துள்ளது. அதே சமயம், அரசு பெற்ற கடன்களுக்காக 8.4 சதவீத வட்டி செலுத்தப்பட்டுள்ளது.


இதன் மூலம் அரசு, தனது முதலீடுகளில் இருந்து அதிகப்படியான வருவாயை பெறுவதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவில்லை என்பது தெளிவாகியுள்ளது. நிதித் தேவை அதிகரித்து வரும் நிலையில், அரசு வழங்கியுள்ள கடன்கள், முன் தொகைகள், அதற்கான வட்டி பெறும் வீதம் குறைந்து வருவது ஆகியவை, அரசின் கடன் சுமையை தாங்க இயலாத நிலைக்கு இட்டு செல்லும். திட்டம் சாரா செலவினத்தை அரசு குறைத்தே தீர வேண்டும்; வரி மற்றும் வரியல்லாத ஆதாரங் களில் இருந்து கூடுதல் நிதியை திரட்டியே ஆக வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது. ஆனால், அதற்கு மாறாக, தமிழக அரசு வருவாய் அல்லாத செலவினங்களை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இது நிச்சயம் வரும் காலங்களில் தமிழகத்தின் பொருளாதார நிலையை வெகுவாக பாதிக்கும் நிலைக்கு கொண்டு செல்லும்.


வருவாய் வரவினங்களில் தமிழக அரசு எப்படி கவனம் செலுத்த தவறியதோ, அதுபோல் திட்டங்களை முடிப்பதிலும் கவனம் செலுத்த தவறியதாக, அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளது. குறிப்பாக, பாசன திட்டங்களை முடிப்பதில் அளவு கடந்த தாமதத்தினால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கால விரயத்தை தடுக்கவும், திட்டமிடுவதை விட கூடுதல் செலவு ஏற்படாமல் தவிர்க்கவும், பணிகளை முறையாக திட்டமிட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும். இதில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். வரவு - செலவு திட்டத்தில் கட்டுப் பாடு இல்லாத தன்மை தமிழக அரசிடம் அதிகம் காணப்படுகிறது. பல திட்டங்களில், ஒதுக்கப் பட்ட நிதி சரியாக செலவிடப் படாமல் திருப்பி ஒப்படைக்கப் பட்டுள்ளது. சில திட்டங்களில் ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப் படவும் இல்லை. திருப்பிச் செலுத்தப்படவும் இல்லை.


கடந்த 2008- 09ம் ஆண்டில் செலவினங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில், 7,311 கோடியே 45 லட்சம் ரூபாய் மீதமாகியது. அப்போது, 153 கோடியே 65 லட்சம் ரூபாய் மிகை செலவினம் சரிகட்டப்பட்டிருந்தது. அரசின் உதவி மானியங்கள் பெறும் 228 தன்னாட்சி நிறுவன அமைப்புகள், குழுமங்கள் தங்களது ஆண்டு கணக்குகளை சமர்ப்பிப்பதில் காலம் தாழ்த்தினர். இதை அரசு கண்டு கொள்ளவில்லை. அதே போல், அரசு பணம் 9.47 கோடி ரூபாய் உள்ளடங்கிய கையாடல்கள், திருட்டு, இழப்புகள் போன்ற 503 சம்பவங்களை நிதி ஆண்டு முடியும் வரை அரசு தெரிவித்து வந்தது. இவற்றின் மீது முறையான இறுதி நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நிதி நிர்வாகம் நன்றாக இருக்க வேண்டுமென்றால், இது போன்ற எல்லாவிதமான கையாடல்கள் மீதும் துறை ரீதியான விசாரணைகளை விரைவாக முடித்து, குற்ற வாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மேலும், இது போன்ற நிகழ்வுகள் பிற்காலத்தில் ஏற்படாமல் தடுக்க, உள் கட்டுப்பாட்டு முறைகளை எல்லாத்துறைகளிலும் வலுப் படுத்த வேண்டும். இதிலும் தமிழக அரசு அதிக அக்கறை செலுத்தவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 293(3)ன் கீழ், வரவு - செலவு திட்டம் சாரா கடன்களை பெறுவதற்கு தடை செய்யப்பட் டுள்ளது. ஆனால், தமிழக அரசு இதை கண்டு கொள்ளாமல், வரவு - செலவு திட்டம் சாராத கடன்களை தொடர்ந்து பெற்று வருகிறது. இது மாநிலத்தின் நிதிப் பொறுப்புகளை அதிகப்படுத்தி வருவதுடன், தேவையற்ற நிதி சுமையையும் ஏற்படுத்தி வருகிறது.


அரசின் வருவாய் வரவினம் 16 சதவீதமாகவும், வருவாய் செலவினம் 25 சதவீதமாகவும் ஒன்றுக்கு ஒன்று சற்றும் தொடர்பில்லாமல் உள்ளது. அதாவது வருவாயை விட அரசின் செலவு மிக அதிகமாக உள்ளது. இதற்கு அரசு ஊழியர் ஊதிய உயர்வு, ஓய்வூதியம், ஊக்க உதவிகளே பெருமளவு காரணமாக அமைந்துள்ளது. வரவு - செலவு திட்டத்தை அரசு சரியாக முறைப்படுத்தவில்லை என்பதை பட்டவர்த்தனமாக காட்டும் வகையில், பதிமூன்று பணிகளில் ஒப்படைக்கப்பட்ட நிதியானது, எவ்வளவு நிதி மீதம் இருந்திருக்க வேண்டுமோ அதை விட அதிகமாக இருந்தது. அதாவது, 1,192 கோடியே 46 லட்சம் ரூபாய் தான் மீதம் இருக்க வேண்டும். ஆனால் 1,286 கோடியே 77 லட்சம் ரூபாய் திரும்ப ஒப்படைப்பு செய்யப் பட்டிருந்தது. தேசிய ஊரக நலவாழ்வு இயக்கம்: தேசிய ஊரக நல வாழ்வு இயக்கம், மத்திய அரசால், கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவக்கப் பட்டது. கிராமப்புற மக்களின் சுகாதார மேம்பாட்டிற்காக இந்த திட்டம் துவக்கப்பட்டது. குறைந்த செலவில், பாரபட்சமற்ற முறையில் தரமான நல வாழ்வு வசதிகள் கிடைக்க வழி வகை செய்ய, இந்த இயக்கத்தின் சார்பில் பல்வேறு பணிகள் மேற் கொள்ளப்பட்டன.


தமிழகத்தில் இந்த இயக் கத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மத்திய தணிக்கை துறை ஆய்வு செய்த போது பல்வேறு உண்மை நிலவரங்கள் தெரிய வந்தன. குறிப்பாக, இயக்கத்தின் தொலைநோக்குத் திட்டங்கள், மாவட்ட, வட்டார மற்றும் கிராம ஆண்டு திட்டங்கள் முறைப்படி தயாரிக்கப் படவில்லை. தணிக்கை நடந்த ஏழு மாவட் டங்களில், அவசர, பேறு கால, சிசு கவனிப்பு வசதிகள் போன்றவைகளுக்காக தரப்பட்ட 62 கோடி ரூபாய் செலவிடப்படவில்லை. கடந்த 2006-09ம் ஆண்டுகளில், தேசிய ஊரக நலவாழ்வு இயக்கத்திற் கான 53 கோடியே 95 லட்சம் ரூபாய், வேறு திட்டங் களுக்கு மாற்றப்பட்டது. வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுகாதார துணை நிலையங்கள் அவற்றிற்கான நிர்ணயத்தின் படி போதுமான ஊழியர் கள் இல்லை. பல வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த சேமிப்பு வசதி இல்லை. பல இடங்களில் அவசர கால, விபத்து சிகிச்சைக் கான அறைகள் இல்லை. பல இடங்களில் அறுவை சிகிச்சை அறைகள் இல்லை. திட்ட மேலாண்மை பிரிவுகளுக்குத் தேவைப்படும் 1,242 பணியாளர் களுக்கு பதில் 52 பணியாளர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள் ளனர். அதை விட பெரிய கொடுமையாக 2005 -09ம் ஆண்டுகளில், 3 லட்சத்து 53 ஆயிரத்து 575 குழந்தைகளில், ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 695 குழந்தைகளுக்கு, மூக்குக் கண்ணாடிகள் வழங்கப் படவில்லை.


விரிவான தரிசு நில மேம்பாட்டுத் திட்டம்: தமிழகத்தில் தரிசு நில மேம் பாட்டு திட்டம் கடந்த 2001ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதற் கான தணிக்கை அறிக்கையில், வருவாய் துறையின் தரிசு நில பதிவேடுகளின் தவறுகளையும், பல் வேறு முகமைகளுக்கிடையே திட்ட மிடுதல், ஒருங்கிணைப்பு, நிதி மேலாண்மை மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத் தியுள்ளது. திட்ட நடைமுறைப் படுத்தலின் முன்னேற்றத்தை மதிப்பிடாமல், நிதிகள் விடுவிக்கப்பட்டதால், 53 கோடியே 80 லட்சம் ரூபாய் வீணாக வங்கியில் முடங்கி கிடந்தது. இத்திட்டத்தில் நிறுவனங் களுக்கு குத்தகைக்கு விடப்பட்ட 272 எக்டேர் அரசு நிலம் பயிரிடப்படவே இல்லை. அவை திரும்ப பெறப்படவும் இல்லை.


நில ஆவணங்களை கணினி மயமாக்குதல்: பயனுள்ள நில சீர் திருத்தத்தை உறுதிபடுத்தவும், பொதுமக்களுக்கு மேம்பட்ட சேவை செய்யவும், மத்திய அரசு உதவியுடன், தமிழகத்தில், "நில ஆவணங்களை கணினி மயமாக்கும் திட்டம்' கடந்த 88-89ம் ஆண்டில் துவங்கப்பட்டது. திட்டம் துவங்கி 20 ஆண்டுகள் ஆன பின்னும் நில ஆவணங்கள் இன்னும் முழுமையாக கணினிமயமாக்கப்படாத நிலையிலேயே உள்ளது. கடந்த 2000-08 வரையில் மத்திய அரசு அளித்த நிதியில் 9 கோடியே 94 லட்சம் ரூபாய், தமிழ்நாடு மின்னணு நிறுவனத் திடம் பயன்படுத்தப்படாமல் இருந்தது. தேவையான சாப்ட்வேர் இல்லாததால், 8 கோடியே 21 லட்ச ரூபாய் செலவில் வாங்கப் பட்ட கணினி பொருட்கள் வீணடிக்கப்பட்டிருந்தன.


நட்டத்தை சந்தித்து வரும் போக்குவரத்து கழகங்கள்: தமிழகத்தில் மொத்தம் ஏழு போக்குவரத்து கழகங்கள் உள்ளன. இவற்றில், 2009ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 20 ஆயிரத்து 104 பஸ்கள் இருந்தன. இதில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 700 பேர் பணிபுரிந்தனர். அரசு பஸ்களில், சராசரியாக தினமும் ஒரு கோடியே 96 லட்சத்து 96 ஆயிரம் பேர் பயணித்தனர். ஏழு போக்குவரத்து கழகங்களும் சேர்த்து 2008-09ம் ஆண்டில் மொத்தம் 5,050 கோடியே 63 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டின. இது மாநிலத்தின் மொத்த உற் பத்தியில் 2.21 சதவீதம். இதில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், 99.5 சதவீதம் ஆதாயமற்ற தடத்திலேயே பஸ்களை இயக்குகிறது. இந்த போக்குவரத்து கழகத்திற்கு 95 கோடியே 74 லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டது. மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்களால், மதுரை போக்குவரத்துக் கழகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. அந்த போக்குவரத்துக் கழகம் 182 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தது. வழித் தடங்களை ஆய்வு செய் யாமல் மாற்றியதால், மதுரைக்கு 10 கோடியே 67 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. மதுரை, கும்பகோணம் போக்குவரத்து கழகங்கள் உழவர் சந்தைகளுக்கு சிறப்பு சேவைகளை இயக்கியதால், ஆறரை கோடி ரூபாய் நட்டம். பஸ் மற்றும் பயணிகள் இல்லாததால் அரசு போக்குவரத்துக் கழகத் திற்கு 169 கோடியே 17 லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டது.


அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாளர் களுக்கும், எரிபொருளுக்கும் மட்டும் 78.49 சதவீதம் அளவு தொகை செலவிடப்படுகிறது. அதிகப்படியான பணியாளர்கள் காரணமாக சென்னை, மதுரை, கும்பகோணம், விரைவு போக்குவரத்து கழகங்களில் மட்டும் 542 கோடியே 38 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் தேவைக்கு அதிகமான பணியாளர்கள் பணியில் உள்ளனர். இப்படி பல்வேறு பிரிவுகளிலும் போக்குவரத்துக் கழகம் நட்டத்தை சந்தித்து வருகிறது.


தமிழக கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் ஏற்பட்ட நஷ்டம்: கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், தமிழகத்தின் ஊரகப் பகுதிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கரும்பு உற்பத்தி செய்யும் நான்கு லட்சத்து 23 ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரம் அந்த ஆலைகளை சார்ந்திருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 15 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இருக்கின்றன. இதற்கென தனியே கமிஷனர் நியமிக்கப்பட்டு, அவரது கட்டுப் பாட்டில், ஆலைகளை ஒழுங்குமுறைப்படுத்தல், கண்காணித்தல், மேற்பார்வையிடுதல், அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் குறித்து 2004-05லிருந்து 2008-09க்கு உட் பட்ட காலத் திற்கான தணிக்கை அறிக்கை, அவற்றின் செயல்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இவற்றின் மொத்த இழப்பு 1,475 கோடி ரூபாய்.


தொழில்துறைக்கான ஒதுக்கீட்டை முழுவதும் செலவு செய்யாத அவலம்: தமிழக அரசின் மொத்த நிதி ஒதுக்கீட்டில், 20 சதவீதத்திற்கு அதிகமாக உள்ள பணிகளில் வருவாய் ஒதுக்கீடுகளில் நிறைய பணம் மீதமாகியுள்ளது. கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறைக்கு ஒதுக்கீடு 111 கோடியே 22 லட்சம் ரூபாய். செலவானது 74 கோடியே 53 லட்சம் ரூபாய். மீதி 36 கோடியே 69 லட்சம் ரூபாய் செலவு செய்யவில்லை. நிதித்துறைக்கு ஒதுக்கீடு 528 கோடியே 57 லட்சம் ரூபாய். செலவானது 403 கோடியே 72 லட்சம் ரூபாய். 124 கோடியே 85 லட்சம் செலவு செய்யவில்லை. உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறைக்கான ஒதுக்கீடு, செலவுகளும் அப்படித்தான் இருக்கின்றன. தொழில் துறைக்கு ஒதுக்கீடு 349 கோடியே 29 லட்சம் ரூபாய். செலவானது 188 கோடியே நான்கு லட்சம் ரூபாய். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு ஒதுக்கீடு 94 கோடியே நான்கு லட்சம் ரூபாய்; செலவு 51 கோடியே மூன்று லட்சம் ரூபாய். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, பிற்படுத்தப்பட் டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உட்பட பல துறைகளிலும் இதே நிலை தான் உள்ளன. பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவிற்கு ஒதுக்கீடு 1,062 கோடியே ஏழு லட்சம் ரூபாய். செலவானது 515 கோடியே 88 லட்சம் ரூபாய் மட்டும் தான். பள்ளிக் கல்வித்துறை, பால் வளத் துறைக்கு ஒதுக்கப்பட்ட முழு நிதியும் செலவு செய்யப்படவில்லை.


எந்த திட்டமும் இல்லாமல் வெட்டிச் செலவு


* வீட்டு வரி, சொத்து வரி, தொழில் வரி, வருமான வரி, விற்பனை வரி என்ற பல பெயர்களில் மக்களிடம் இருந்து மத்திய, மாநில அரசுகள் வருவாயைப் பெறுகின்றன. இதன் மூலம் பெறப்படும் வருமானத்தை முறையாக மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவிடுகிறதா என்றால் இல்லை என்றே பதில் வருகிறது.


* கலர் "டிவி'க்கு மட்டும் நான்கு ஆண்டுகளில் 3000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


* இலவச மின்சாரத்திற்காக ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது


* டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பஸ் கட்டணங்களை உயர்த்தாமல், பஸ் போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு மானியமாக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வாரி வழங்குகிறது.


* உணவு மானியமாக ஆண்டுக்கு 3000 கோடி ரூபாய் வரை அரசு வழங்குகிறது.


* கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், வீ.வ.வாரியம், குடிசை மாற்று வாரியம், டிட்கோ, டான்சி, சிட்கோ எனப்படும் பல வகை அரசு நிறுவனங்கள் எல்லாமே நஷ்டத்தில் தான் இயங்குகின்றன. இவற்றிற்கு, மானியங்களை அரசு வாரி வழங்குவதால், மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. புதிய மின் நிலையங்களை அமைக்க தனியாரிடமும், உலக வங்கியிடமும் கையேந்தி நிற்க வேண்டிய நிலையில் உள்ளது. இலவச "டிவி'க்கு வழங்கிய 3000 கோடி ரூபாயை மின் நிலையம் அமைக்க ஒதுக்கியிருந்தால் தமிழகத்தில் இன்று மின் வெட்டே இருந்திருக்காது.


கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் மிகப்பெரிய அணைக்கட்டோ, அனல் மின் நிலையங்களோ துவங்கப்படவே இல்லை. பஸ் போக்குவரத்துக் கழகங்களை அரசே நடத்த வேண்டுமா? தமிழக அரசுக்கு மிகப்பெரும் சுமையாக இருப்பது அரசு பஸ் போக்குவரத்துக் கழகங்கள் தான். அரசு, நிர்வாகம் செய்வதை விட்டு விட்டு வர்த்தகம் செய்வதால் தான் மிகப்பெரும் பிரச்னைகள் ஏற்படுகின்றன. கட்டணம் நிர்ணயம், பஸ்கள் ஒழுங்காக இயக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பை மட்டும் அரசு வைத்துக் கொண்டு பஸ்களை தனியாரிடமோ, கூட்டுறவு அமைப்புகளிடமோ விட்டு விடலாம். அரசு போக்குவரத்து ஊழியர்களிடமே, குறிப்பாக 10 ஊழியர்களுக்கு ஒரு பஸ் என்ற முறையில் பிரித்து கொடுத்து தொழிலாளர்களை நிர்வாகிகளாக மாற்றி விடலாம். தனியாருக்கு இணையாக அவர்களும் பஸ்களை இயக்குவர். லாபத்தை அவர்களே பிரித்து எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் அரசுக்கு சுமையும் குறையும். தொழிலாளர்களிடம் இருந்து எதிர்ப்பும் வராது.

Thursday, May 20, 2010

திமுக சாதனை

திமுக சாதனைகளை பட்டியளிடனும் என்று ஆசை பட்ட நண்பரின் Comments

1.திமுகவினர் அதிகாரிகளுடன் சேர்ந்து மணல் கொள்ளை.

2.தடை செய்யப்பட்ட லாட்டரிகள் அமோக விற்பனை.

3.மக்கள் வரிபனத்தில் கருணாநிதி நடத்திய பல பல குடும்ப விழாக்கள்.

4.அதிமுக ஆட்சியில் தெருவுக்கு இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகள் இருந்தன இதை திமுக ஆட்சியில் தெருவுக்கு பத்து கடைகள்.

5.மளிகை கடைகள் மூலமும் மது விற்பனை செய்ய வைத்தது.

6. அதிமுக ஆட்சியில் மழை நீர் சேகரிப்பு திட்ட கட்டிடங்கள் திமுக ஆட்சியில் சமையல் கூடங்களாக மாற்றியது.

7.பல நல்ல திட்டங்கள் தமிழகத்துக்கு வராமால் தடுக்கப்பட்டன.

8.தமிழர்கள் இலங்கையில் மடிந்த போது அரை மணி நேர உண்ணாவிரதம் நாடகம்,எம்பிக்கள் ராஜினாமா நாடகம்.

9.அரசு பணத்தில் விமானத்தில் டெல்லி பறந்து குடுபதுக்காக மந்திரி பதவிகள் வாங்கி வந்தது.

10.குடும்ப வாரிசுகள் சண்டையில் மதுரை கொலைகள் அதன் மூலம் வந்த கலைஞர் டிவி.

11.திமுகவினர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால் கொடுதவரையே உள்ளே தள்ளி லாடம் கட்டுவது.

12. இலவசம் கொடுத்து ஏமாற்றியது.

13. இடைதேர்தல் வரலாற்றில் பணத்தை கொடுத்து ஒரு புதிய உத்தியை இந்தியாவுக்கு அறிமுகபடுத்தியது.

14.இலங்கை தமிழர் கொல்லப்படும் போது வீட்டில் உட்கார்ந்து கடிதம் எழுதியது.

15.படபிடிப்பு தளத்துக்கு சென்று அங்கே உட்கார்ந்து கதை வசனம் எழுதியது.

16.தினம் ஒரு விழா தினம் ஒரு விருது தினம் ஒரு பட்டம்.

17.பட்டபகலில் நடு ரோட்டில் போலீஸ் அதிகாரி படுகொலை சாகும் வரை வேஷ்டியை மடித்து கட்டி வேடிக்கை பார்த்த மந்திரிகள்

18.விலைவாசி விண்ணுக்கு போனது.அரசு நிலங்களை எல்லாம் திமுகவினர் மடகியது.

19.எங்கும் ஊழல்,எதிலும் லஞ்சம்,எங்கும் கொலை வழிப்பறி,கற்பழிப்பு,சட்டம் ஒழுங்கை கேலிகுரியாகியது.

20.மாணவர்களின் தேர்வுகள் நடந்த சமயம் தினந்தோறும் வரலாறு காணாத மின்வெட்டுகொடுத்தது.

21 நமீதாவை ஒரு படத்தில் நடிக்க சிபாரிசு செய்தது.தமிழக பெண்களின் கற்பை பற்றி விமர்சித்த நடிகை குஷ்புவை முற்போக்கு சிந்தனைவாதி என பெயரிட்டது.

22.இப்போது யாருக்கும் பத்து பைசா பிரயோஜனம் இல்லாத செம்மொழி எடுக்க கோடிகணக்கான மக்கள் பணத்தை வாரியிறைப்பது.

23.சபைக்கு செட்டிங் டூம் மாட்டியது.

24. மாற்றுகட்சிகாரர்களை கடத்தி திமுகவில் இணைத்தது.நடிகர்களை மிரட்டி தன் விழாவில் பங்குகொள்ள செய்தது

25. ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் செய்தது.

26.வக்கீல்களை போலிசை விட்டு அடிக்க விட்டது.

இது தான் திமுக சாதனைகள்... இன்னும் நிறைய சொல்லாலாம்

Wednesday, May 19, 2010


அரசு பஸ் நிலைமை இப்படி இருக்க, இலவச கலர் டிவி தேவையா???



  


  


Saturday, February 27, 2010

இலவசம் எனும் மாய நிழல்


எதிர்க்கட்சித் தலைவர், ஜெயலலிதா போனால் போகிறது பிழைத்துப் போங்கள் என்று, ஆறு மாதத்திற்குப் பின் சட்டசபைக் கூட்டத்துக்கு வந்து, தி.மு.க., அரசு மீது அடுக்கடுக்காக குற்றசாட்டுகளை அள்ளி வீசிவிட்டு, சென்றிருக்கிறார். அதில் முக்கியமானது, தமிழக அரசுக்கு உள்ள மொத்த கடன் சுமை 90 ஆயிரம் கோடி ரூபாய் என்பதும், பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 15 ஆயிரம் ரூபாய் கடனுடன் பிறக்கிறது என்பதாகும்.


இவற்றுக்கு முதல்வர் கருணாநிதி, சில நாட்கள் முன், மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், மொத்த கடன் 76 ஆயிரம் கோடி ரூபாய் தான் என்றும், பிறக்கும் குழந்தைக்கு 13 ஆயிரம் ரூபாய் தான் கடன் என்றும், கடன் வாங்காமல் எந்த அரசும் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார். அருமையான, மிக நல்ல விளக்கம் இது! "வரவு எட்டணா, செலவு பத்தணா, அதிகம் இரண்டணா, கடைசியில் துந்தனா' என்று தான் இது முடியும். தமிழக அரசுக்கு, 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன்; மத்திய அரசுக்கு, பல லட்சம் கோடி கடன். இவை அனைத்தையும், வெளிநாடுகளில் குறிப்பாக, சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள இந்திய அரசியல்வாதிகளின், ஊழல் மூலம் சம்பாதித்த பணம் 93 லட்சம் கோடி ரூபாயை மீட்டுக் கொண்டு வந்தாலே, நிமிடங்களில் அடைத்து விடலாம். இதைச் செய்ய, மத்திய அரசை வற்புறுத்தி இதுவரை தி.மு.க., எம்.பி.,க்களோ அல்லது அ.தி.மு.க., எம்.பி.,க்களோ பார்லிமென்டில் பேசி இருக்கின்றனரா என்றால், இல்லை என்பது தான் பதில். யாராவது தன் தலையில், தானே மண் அள்ளி போட்டுக் கொள்வரா?


"கடன் வாங்காமல் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாது' என்று, முதல்வர் சொல்வதற்கு காரணம், திருமணமாகாத பெண்களுக்கு திருமணச் செலவுக்கு அரசு மானிய உதவி, கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு மானியம், குழந்தைகளுக்கு இலவச சத்துணவு, இலவச பள்ளிப் படிப்பு, இலவச கல்லூரி படிப்பு, பெரியவர்கள் ஆனவுடன் இலவச வேட்டி, சேலை, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச காஸ் இணைப்பு, இலவச காஸ் அடுப்பு, குடிசைகளுக்கு இலவச மின்சாரம், இலவச நில பட்டா, இலவச வீட்டு மனைப்பட்டா, 40 வயது கூட நிரம்பாதவர்களுக்குகெல்லாம் முதியோர் பென்ஷன், செத்த பின் சுடுகாட்டு செலவுக்கு அரசு மானியம், இலவச "டிவி' இன்னும் பலப்பல.


இப்படிப்பட்ட இலவசங்களால், வெகு சீக்கிரமே தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படப் போகிறது; விவசாயம் பாதிக்கப்படப் போகிறது. இப்போதே தொழிற்சாலைகளில் வேலை செய்ய ஆள் கிடைப்பதில்லை. எல்லாம் இலவசமாக கிடைக்கும் போது, யாரும் வேலை பார்க்க தயார் இல்லை. அப்படியே ஆள் கிடைத்தாலும், அவர்கள் வழக்கத்தை காட்டிலும் அதிகமான சம்பளம் எதிர்பார்க்கின்றனர். அதிக சம்பளம் கொடுத்தால், உற்பத்திப் பொருட்களின் விலைவாசி தானாகவே உயரத்தான் செய்யும். இது தவிர, சமையல் காஸ் இணைப்பு போன்றவற்றை இலவசமாக கொடுத்து விட்டு, அதே நேரம், காசு கொடுத்து ரீபில் சிலிண்டர் வாங்க வருபவர்களுக்கு இல்லை என்று சொல்கின்றனர் அல்லது 25 நாட்கள் கழித்து தான் பதிவோம் என்கின்றனர். பதிந்த பின் 15 நாட்கள் கழித்து சிலிண்டர் கொடுக்கின்றனர். இலவசமாக கிடைக்கும், காசு கொடுத்தால் கிடைக்காது என்ற நிலைமை, உலகில் வேறு எங்காவது பார்க்க முடியுமா?


பொதுமக்களில் அனைத்து தரப்பினரையும் சாராயம் குடிக்க வைத்து, குடிகாரர்களாக்கி இதில் ஆண்டுக்கு கிடைக்கும் 10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை, இலவச திட்டங்களுக்கு அரசு செலவிடுகிறது. மின்சார வாரியத்தில், நஷ்டத்தை மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து, ஆண்டுக்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் மானியமாக வழங்குகிறது. இது தவிர, மத்திய அரசின், ஐந்தாண்டு திட்டப் பணிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்துக்கு கொடுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாயை, இலவச சத்துணவுத் திட்டத்திற்கும், இதர பிற இலவச திட்டங்களுக்கும் செலவழிக்கிறது. ஆக, ஐந்தாண்டுத் திட்டத்திற்கு திட்டமிடப்பட்ட பணிகள் எதுவும் செய்யப் படுவதில்லை. அப்படியே ஒருவேளை செய்தால், இருக்கவே இருக்கிறது, உலக வங்கியிடம் கடன் அல்லது வெளிநாடுகளில் கடன் அல்லது வேறு எங்கெல்லாம் கடன் வாங்க முடியுமோ அங்கெல்லாம் கடன். பின் ஏன், தமிழக அரசின் கடன் சுமை 76 ஆயிரம் கோடியைத் தொடாது? இப்படி, மேன்மேலும் கடன் வாங்கிக் கொண்டே சென்றால், எப்போது, எப்படி இந்த கடனையெல்லாம் அடைப்பது? அதுவரையில் இதற்கு செலுத்தும் வட்டித் தொகை எவ்வளவு ஆகும்?


இலவசங்களையும், மானியங்களையும் ரத்துச் செய்தால் தான், நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்று, முன்பு பேசிய பொருளாதார நிபுணரும், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரும், இந்நாள் இந்திய பிரதமருமான மன்மோகன் சிங், இங்கு நடக்கும் அத்தனை கூத்துக்களையும் வாய் திறவாமல், மவுனமாக பார்த்துக் கொண்டிருக்கிறாரே... ஏன்? ஓட்டு வங்கி அரசியல் தான் காரணம். ஆக்ஸ்போர்ட்டில் பயின்ற, ஆசியாவில் பொருளாதாரப் புலி என்று பெயர் பெற்ற, ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த போதும் சரி, இப்போதும் சரி, தமிழக அரசின் இலவசங்களைப் பற்றியும், மானியங்களைப் பற்றியும், வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. "மாறாக, இலவச "டிவி' திட்டமும், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டமும் சாத்தியமானது தான்' என்று புகழ்ந்துரைத்தார். காரணம், தானும், தன் வழித் தோன்றல்களும், தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் என்ற ஆசையால் தான்.


ஆக, இப்போது எல்லா இலவச திட்டங்களுக்கும் சிகரமாக, பனிரெண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் செலவில் 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் இலவசமாக கட்டித் தரப் போகின்றனராம். 1970ம் ஆண்டுகளில் கட்டிய குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி கட்டடங்கள் பல இடிந்து விழுந்து விட்டன. மீதமுள்ளவை, மிகுந்த சேதமடைந்து, எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், வெறும் களிமண்ணாலும், சுண்ணாம்பாலும், கற்களாலும், கரிகால் சோழ மன்னனால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கல்லணை இன்றளவும், காலத்தை வென்று நிற்கிறது. நெல்லை மாவட்டத்தில், அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சிக்கு இடையே தாமிரபரணி ஆற்றின் மேல் 1870ல் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் வெறும் செங்கல்லாலும், சுண்ணாம்பாலும் கட்டப்பட்டிருக்கும் ஒரு பழைய பாலத்தை பொதுப் பணித் துறையினர் இடிக்க முயற்சி செய்து, இடிக்க முடியவில்லை. பாலம், மிகவும் வலுவாக உள்ளது என்று, விட்டு விட்டுச் சென்றனர். அந்த பழைய பாலம் இன்றளவும், காட்சிப் பொருளாக உள்ளது.


அதே சமயம், கட்டி முடித்து 15 ஆண்டுகள் கூட நிறைவடையாத சமத்துவபுர வீடுகள் பல, பொல, பொலவென்று உதிர்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளன. இந்த நிலைமையில், மக்கள் பணம் பனிரெண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாயை செலவு செய்து, 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டினால் அவை எப்படி இருக்கும். இப்படி அரசுப் பணம், அதாவது, மக்களின் வரிப்பணம், விழலுக்கு இறைத்த நீர் போல வீணாக போனால், அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள், சாலை வசதிகள், புதிய ரயில் பாதைகள் போட பணம் எங்கிருந்து ஒதுக்க முடியும்? சரி, ரயில்பாதை திட்டம் தான் இல்லை... நான்கு வழிச்சாலை திட்டமாவது தமிழகம் முழுவதும் நிறைவேறுமா? இவற்றை எல்லாம் எதிர்த்துப் போராட, இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கோ, வர்த்தக சங்கங்களுக்கோ, பிற பொது நல அமைப்புகளுக்கோ, எண்ணமோ, துணிவோ, திராணியோ இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.


மொத்தத்தில், இலவசங்கள், இன்று வேண்டுமானால் இனிக்கலாம்; பின்னாளில், இதன் விளைவுகளாக, வேலைக்கு ஆள் பற்றாக்குறை, தொழில்கள், விவசாயம் நசிந்து போதல், உணவு உற்பத்தி குறைவு, விலைவாசி உயர்வு, இன்னும் பல எதிர்பாராத பிரச்னைகளை தமிழகம் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது உறுதி. அதற்குள் தமிழர்கள் விழித்துக் கொண்டால் நல்லது.


                                                                                   - டாக்டர்.வி.ராதாகிருஷ்ணன் -

Thursday, February 4, 2010

என்.கே.கே.பி.ராஜா - பினாமிகள் நிலஆக்கிரமிப்பு

என்.கே.கே.பி.ராஜா பதவியில் இருந்து நீக்கபட்டார். ஆனால் அவரின் பினாமிகள், ஆட்களின் கொட்டம் இன்னும் அடங்க வில்லை. இவர்களின் ஆட்டம், அராஜகம், கட்டபஞ்சாயத்து ஈரோடு மாவட்டம் சில பகுதிகள், திருப்பூர் மாவட்டம் - காங்கயம், நத்தகாடையூர் பகுதிகளில் பரவி உள்ளது. இவர்களின் ஆட்கள் சர்வ சாதாரணமாக பாமரன்களை மிரட்டி, வதைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இவர்களது நிலஆக்கிரமிப்பு, குடுசை போடுதல், ஆள்கடத்தல், கட்டபஞ்சாயத்து, வேலி பிடுங்குதல், பட்டா மாற்றம் செய்வது, மிரட்டலுக்கு பயந்து யாரும் தொழில் செய்ய பயபடும் நிலமை இருக்கிறது.

இரவோடு இரவோடாகா குடிசை போட்டு, ஆட்களுக்கு கிடா விருந்து வைத்து நிலஆக்கிரமிப்பு செய்கிறார்கள். முடியாதபட்சத்தில் கிடைத்தவரை பேரம் பேசி 'சுருட்டிக்கொள்வது' எனும் முயற்சியில் நில உரிமையாளரிடம் பேசுகின்றனர். நாளுக்கு நாள் நில மதிப்பு அதிகரித்து வருவதால், நில உரிமையாளர்களும் பணத்தை கொடுத்து, நிலத்தை திரும்ப பெரும் நிலைமை இருந்து வருகிறது. ஆளும் கட்சி ஆட்கள் என்பதால் யாரும் பகைத்து கொள்ள விரும்புவது இல்லை.

காங்கயம், நத்தகாடையூர், முள்ளிபரம் பகுதிகளில் தினமும் இது போன்ற பிரச்சனைகள் லோக்கல் போலீஸ் கிக்கு வந்தாலும்
இவர்கள் பொதுவாக ஆளும் கட்சி என்பதால் அரசியல் பவரால், கைகள் கட்டுப்பட்ட லோக்கல் போலீஸ், இந்த குற்றவாளிகளை மறைமுகமாகவும், சில நேரங்களில் நேரடியாகவும் உதவி செய்கிறது. காங்கயம் நகரில் என்.கே.கே.பி.ராஜாவின் பினாமிகளின் கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் ஒழிக்கப்படாமல் இருந்து வருகிறது. காங்கயம் போலீஸ் இது போன்ற கேஸ்களை SPக்கு தெரியாமல், நில உரிமையாளரிடம் பேரம் பேசி முடித்து வைப்தாக தகவல்கள் வருகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு,
நிலஆக்கிரமிப்பு சம்பவம் தொடர்பான புகார் பெற்றும் வழக்கு பதியாமல் கிடப்பில் போடப்பட்டதாகா காங்கயம் போலீஸ் மீது புகார் கூறப்பட்டு இருக்கிறது.

இதில் அதிகம் பாதிக்கபடுவது நடுத்தர வர்க்கத்தினர், பாமரன்கள் தான். குருவி போல் சேமித்த பணத்தில் இடத்தை வாங்கும் பாமரன்களிடம், பிரச்னை உண்டு பண்ணி 10 லட்சம் ரூபாய் பணம் கொடு, 20 லட்சம் ரூபாய் பணம் கொடு, சமரசம் பேசலாம் இல்லை என்றால் குடிசை போட்டு ஆக்கிரமிக்கும் இவர்கள், அதை தன் வசப்படுத்த முழு முயற்சி செய்கின்றனர்.

இதனால் நடுத்தர வர்க்கத்தினர், இந்த அபகரிப்பு கும்பலைக் கண்டு அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். சொத்துக்காக கொலையே நடக்கும் இந்தக் காலத்தில், அரசியல், அதிகாரம் இல்லாத நடுத்தர வர்க்கத்தினர் என்ன தான் செய்ய முடியும்? ஆளும் கட்சி ஆட்கள் மீது கேஸ் போட்டால், பாமரன்கள் குடும்பத்தை மிரட்டலாம், கடத்தலாம். இல்லை கேஸ் தான் நிற்குமா?

கஷ்டபட்டு இடத்தை வாங்கினால் கொஞ்சம்குட சம்பதம் இல்லாத இவர்கள் '10 லட்சம் ரூபாய் பணம் கொடு', '20 லட்சம் ரூபாய் பணம் கொடு' என்பது எப்படி நியாயம் ?

ஒய்வு எடுக்க வேண்டிய வயதில் இரவு பகல் பாராது மக்களுக்குக்கா உழைக்க்ம் கலைஞர் ஆட்சியல், இப்படி தி.மு.கா பெயரை சொல்லி அராஜகம் நடக்கலாமா?

பதவி நீக்க பட்ட ஒருவரின் பினாமிகள் இப்படி அராஜகம் செய்தால், பதவியில் இருக்கும் அமைச்சர், அதிகாரிகளை யார் கேட்பது?

தி.மு.கா வின் மேல் மட்ட அதிரடி நடவடிக்கை காங்கயம் பகுதிக்கு தேவை. தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கட்சியில் அதிரடி மாற்றங்கள் செய்யபட்டு தி.மு.கா பெயரை சொல்லி அராஜகம் பண்ணும் இவர்களை களைய வேண்டும். இல்லை என்றால் தி.மு.கா வின் ஒட்டு வங்கி ஈரோடு, திருப்பூர் மாவட்டம் - காங்கயம் பகுதிகளில் மிகவும் பாதிக்க படும்.

Tuesday, January 12, 2010

தமிழக அரசின் முக்கிய திட்டங்களுக்கான நிதி கலர் 'டிவி' திட்டத்திற்கு ஒதுக்கீடு

தமிழக அரசின் முக்கிய திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர், "டிவி', காஸ் அடுப்பு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க பயன்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியை, முக்கியமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டாமென அரசுக்கு சிபாரிசு செய்துள் ளோம்,'' என தமிழக, புதுச்சேரி இந்திய தணிக்கை முதன்மை அதிகாரி சங்கர் நாராயணன் தெரிவித்துள்ளார்.



அவர், மேலும் கூறியதாவது:தமிழகத்தில், கடந்தாண்டு மார்ச் வரை கிராமப்புறங்களில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட கோடிக் கணக்கான ரூபாய் பற்றி, தணிக்கை ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டது.கிராமப்புறங்களில் குளம் வெட்டுதல், வாய்க்கால் வெட்டுதல் போன்ற நீர் ஆதார வசதியை மேம்படுத்துதல் மற்றும் உள் கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு உறுதுணையாக, "அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி' திட்டம் உள்ளது.ஆறு மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டிய 120.98 கோடி ரூபாய், முக்கியமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர் "டிவி', இலவச காஸ் அடுப்பு, முதியோருக்கான பென்சன், மகளிர் உதவிக் குழுவினருக்கு கடன் மற்றும் தள்ளுபடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.



ஒரு சில நகராட்சிகளில், வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி, பிற திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விவரங்கள் அடங்கிய பட்டியலை, கடந்த திங்கள் கிழமை, சட்டசபையில் தாக்கல் செய்துள்ளோம்.உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு பணியை எடுத்துக் கொள்வதற்கு முன், அப்பணியை எப்படி செய்ய வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை இல்லாமல், பல வேலைகளை திட்டமிடாமல் செய்து, மக்கள் பணத்தை வீணடித்துள்ளனர்.சென்னை மாநகராட்சி, நிர்வாகம், சுகாதாரம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டத்தில், மோசமான பணியை செய்துள்ளது. பொதுமக்களின் உடல் நலனில் அக்கறை செலுத்துவதற்கு, சுகாதார ஆய்வாளர்கள் போதிய அளவில் இல்லை.



இப்பிரச்னையால், குழந்தைகள் மற்றும் பெண்கள் நலன் கவனிக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. சுகாதார மையங்களில் உயிர் காக்கும் மருந்துகளான "பென்சிலின், பாரசிட்டமால்' போன்ற மருந்துகளின் இருப்பு போதிய அளவு இல்லை.உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதார ஆய்வாளர்களின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லாததால், கலப்பட உணவு மற்றும் சுகாதாரமற்ற தண்ணீரின் மாதிரிகளை சோதனை செய்ய முடிவதில்லை.இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, இலவசங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என, அரசுக்கு சிபாரிசு செய்துள்ளோம்.இவ்வாறு சங்கர் நாராயணன் கூறினார்.

Monday, January 11, 2010

About Freebies - JJ

மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பின் ஆண்டு சதவீதம், அ.தி.மு.க., ஆட்சியில் 11.89 ஆக இருந்தது, 4.55 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது ஏன்?,'' என்று இரு ஆட்சிகளின் புள்ளி விவரங்களை கோடிட்டு காட்டி, சட்டசபையில் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.

சட்டசபையில் ஜெயலலிதா பேசியதாவது: முந்தைய தி.மு.க., ஆட்சியில் நிதி நிலைமை சீர்குலைந்து மோசமான நிலையில் தான், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது. அதன்பின், நிதிநிலையை சீர்படுத்தி, மீண்டும் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றோம்.
ஆனால், தற்போது மீண்டும் மாநிலத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. 2009-10ம் ஆண்டுக்கான பட்ஜெட் திட்ட மதிப்பீட்டில், ஒட்டுமொத்த கடன் சுமை 85 ஆயிரத்து 395 கோடியே 84 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005-06ல் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் வருவாய் உபரி 1,951 கோடி ரூபாயாக இருந்தது. அதே நேரத்தில், நிதிப்பற்றாக்குறை 2,251 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது தி.மு.க., அரசின் 2009-10ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், வருவாய் பற்றாக்குறை 1,024 கோடி ரூபாய் என்றும், நிதிப் பற்றாக்குறை 11 ஆயிரத்து 824 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி நிதித்துறை செயலர் அளித்த பேட்டியில், "தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை 83 ஆயிரம் கோடி ரூபாய் என்றும், ஆண்டு வட்டியாக 6,000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது' என்றும் குறிப்பிட்டுள்ளார். அதன்பின், ஒரு ஆண்டு கடந்துவிட்டது. இப்போது, மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் தொகை 90 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து விட்டதாக தகவல் வருகிறது.
இவ்வளவு கடன் வாங்கிய நிதியை, சரியான வழியில் செலவு செய்யப்படாதது தான், பொருளாதார சீர்குலைவுக்கு காரணம். ஒன்றுக்கும் பயனில்லாத இலவச கலர் "டிவி' போன்ற இலவச பொருட்கள் வழங்குவதற்குத் தான், கடனாக பெற்ற நிதி செலவழிக்கப்படுகிறது. கடனாக பெறும் தொகையை, அதிக வருவாய் தரக்கூடிய இனங்களில் செலவு செய்யப்படவில்லை.
கடனாக பெற்ற நிதியில் இருந்து, தொழிற்சாலை இல்லாத பகுதிகளில் புதிதாக தொழிற்சாலை ஆரம்பித்திருந்தால், அதன் மூலம் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பு பெற்றிருப்பர். அவர்கள் வேலைக்குச் சென்று, அவர்களே வீடு கட்டிக் கொள்வார்கள்.
கலர் "டிவி' வாங்கிக் கொள்வார்கள். அவர்களுடைய தேவையை அவர்களே சுயமாக பூர்த்தி செய்து கொள்வதற்கு ஏற்ற சூழ்நிலையை அரசு உருவாக்க வேண்டும். இதுதான், நல்ல ஆரோக்கியமான சமுதாயத்திற்கு அடையாளம்.
அப்படி செய்வதற்கு பதில், தி.மு.க., அரசு தமிழகத்தை திவாலாகும் நிலைக்கு தள்ளிக்கொண்டு இருக்கிறது. தி.மு.க., அரசின் தவறான பொருளாதார கொள்கையால், வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. வரிகள் மூலம் வரும் வருவாய் பலவீனமடைந்துள்ளது. பற்றாக்குறை பெரிய அளவில் இருக்கிறது. விலைவாசியும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மீண்டும் இந்த அரசு, தமிழகத்தை அதல பாதாள அழிவுக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.
மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி வீதம், அ.தி.மு.க., ஆட்சி காலமான 2004-05ல் 11.45 சதவீதமாகவும், 2005-06ல் 11.89 சதவீதமாகவும் இருந்தது. இந்தியாவில், தமிழகம் முதல் இடத்தில் இருந்தது. இது, 2007-08ல் 4.41 சதவீதமாகவும், 2008-09ல் 4.55 சதவீதமாகவும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
தேசிய அளவில், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற சிறிய மாநிலங்களை விட, கடைகோடி நிலையில் இன்று தமிழகம் இருக்கிறது. இது போன்ற நிலையில், சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை எத்தனை கோடி ரூபாய்?
21 லட்சம் வீடுகளை கட்டித்தர பணம் எங்கிருந்து பெறப் போகிறீர்கள்?
மாநில மொத்த உற்பத்தி மதிப்பின் ஆண்டு வளர்ச்சி வீதத்தில் ஏன் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது? இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

Sunday, January 10, 2010

Do Not Give Free Stuff - I Like this comment



All our tax money going vain to satisfy one MK family. What to do? This is the fate of Tamil Nadu. At this moment it is not easy job to correct the educated/uneducated peoples mind. Peoples are minds totally corrupted by MK. Even if u try to convey to the peoples they will be against you. This is due to lack of un education at the rural sides. And these peoples votes are very important for MK. You have to note one thing here, MK is not working for peoples. Working for votes to be in the power. Really if he thinks about the people or country development he will not do like this. He wants to keep the peoples in the same condition i.e away from education and want use their power (vote). That’s why he announced all the free scheme.

1.1 KG rice/1Rupee:

a. By this Poor peoples no need to go to work. Due to this they will become lazy and it leads no need to earn money for their children’s education/development. These children also will become uneducated and will follow the parent’s way.

b. Rice robbery in the ration by ministers and DMK party peoples.

c. Waste of peoples TAX money to compensate the lose incurred to reduce the rice price.

2. Free TV:

a. This allows very big robbery/bribes purely for the MK family and members.

b. Poor DMK people will get it and will sell it outside for the lower price. Because no money to get the cable connection and pay for (no)current bill. The buyers are DMK party members. Buying at low price and Selling it in the other state for the reasonable price.

c. Only the lower middle class people will keep the TV and watching only

Kalignar and SUN TV’s. The competition between SUN TV and Kalaignar TV’s is artificially created by MK for his own benefit. This is purely an idea to divert the people and Keep their mind away from other media’s and channels.

d. Poor people will watch all the program which is in favor of MK family. They will be Isolated from the world.

e. End of the show waste of peoples TAX money.

Employment

Instead of wasting the money like above, why cant Govt. start an industry together with our local private industry. 50%-50%. The management will be by Private to get good profit. The 50% manpower recruitment by Government through Employment office. The 50% of the recruitment by Private industry through college campus interview etc. And permission to private industry to recruit experienced people. Govt can put an committee to monitor the progress/profit.

So the government can make lot of new industry and also can make whatever industry currently missing in the Government list.

The conclusion is we can make TN strong i.e. W/O unemployment if we use the money in the right way. Peoples have brain they have to think twice before get the free item.

But the changing the current peoples mind is not easy job as I told earlier. The only way is third world war and India especially TN should be affected more to get rid off all the above useless peoples including me. At least the next generation (like what happened in Japan after Second World War) will be good.

By M Siva,Dubai,United Arab Emirates 1/10/2010 11:51:46 AM IST

தமிழக அரசின் 2010ம் ஆண்டுக்கான கவர்னர் உரையில், இலவசங்கள் அள்ளித் தெளிக்கப்பட்டதை அகில இந்தியாவும் ஆச்சரியமும், கிண்டலும் கலந்த உணர்வுடன் கவனித்து, கருத்துக்களை வெளியிட்டுள்ளது. பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று, "தமிழக அரசின் நல்வாழ்வுத் திட்டம் எனும் போர்வையிலான இலவசங்கள், ஒரு கடிதம் அதன் உறையை விட பெரிதான தாளில் எழுதப்பட்டு, அந்த உறையினுள் திணிக்க முடியாத அளவு உள்ளது' என கிண்டலடித்துள்ளது. அதாவது, பட்ஜெட்டில் பணம் இருக்காது எனக் கூறுகிறது இந்தப் பத்திரிகை.



பொருளாதார நிபுணர்களும், சமூக, அரசியல் ஆய்வாளர்களும், "ஓட்டு வங்கி அரசியலின் உச்சக்கட்டம்' என, இந்த இலவசங்களை குறிப்பிட்டு, தங்கள் கவலையை வெளிப்படுத்துகின்றனர். மத்திய அரசின் 2001ம் ஆண்டு கணக்குப்படி, தமிழகத்தில் 36 லட்சத்து 32 ஆயிரத்து 119 குடும்பங்கள் தான் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவை. ஆனால், ஜூன் 16, 2008 கணக்குப்படி, தமிழக அரசு, 59 லட்சத்து 55 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச, "டிவி' அனுமதித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கப் பட்டு, ஏழைகள் மட்டுமின்றி, கலர் "டிவி' இல்லாத எல்லாருக்கும் இலவச, "டிவி'க்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்து விட்டனர். தி.மு.க., ஆட்சிக் காலங்களில் அளிக்கப்பட்ட அதிகமான சம்பளம் மற்றும் சலுகைகள் விளைவாக தமிழக அரசின் துண்டு விழும் பட்ஜெட்டில் கணிசமான பகுதி, அரசு ஊழியர் சம்பளம் சார்ந்த செலவுகள். அதாவது, 2008-09ம் ஆண்டுக்கான இறுதி பட்ஜெட் மொத்த செலவினம் 55,402 கோடியே 56 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய். இதில், 24 ஆயிரத்து 358 கோடி ரூபாய், அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் பல அரசு திட்டங்களில் பணிபுரிபவர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் சார்ந்த செலவினங்கள். இது, பட்ஜெட்டில் 52 சதவீதம். உலகின் எந்த பணக்கார, நடுத்தர நாடுகளிலும் பட்ஜெட்டில் இவ்வளவு சதவீதம் ஊழியர் செலவினங்களுக்கு ஆவதில்லை.



இந்த முறை ஆட்சியமைக்கப்பட்டு, 44 மாதங்களில் தி.மு.க., அரசு அள்ளித் தெளித்த இலவசங்கள், சலுகைகள் அதிகமாகி, நமது பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிகோலும் கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவையான நிதி, அறவே அற்றுப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கடன் தள்ளுபடிகள், குறிப்பாக தொழில் தொடங்க வாங்கப்படும் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவது, அடுத்து கடன் பெறுபவர்கள் யாரும் கடனை திருப்பிச் செலுத்தாத மனநிலையை உருவாக்கும். இந்த அடிப்படை உண்மையை அரசு அதிகாரிகள் பல முறை அரசியல் தலைவர்களுக்கு, குறிப்பாக முதல்வர்களுக்கு எடுத்துக் கூறியிருக்கின்றனர். உயர் அதிகாரிகள் பலரும் முதல்வரின் கவனத்தைக் கவர, போட்டி போட்டு இலவசம் மற்றும் நடைமுறைக்கு ஒவ்வாத பல செலவினங்களை உருவாக்கி, நமது மாநில பொருளாதாரத்தை பாழடித்து விட்டனர்.



தமிழக அரசு தனது பட்ஜெட்டை, துண்டு விழாத வகையில் திட்டமிடல் வேண்டும். அரசு கடனுக்கு வட்டியாக, கடந்த ஆண்டு 6,227 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. கடன் தொகை 71 ஆயிரத்து 668 கோடி ரூபாயை தாண்டிவிட்டது. மக்களுக்கு பொது நன்மைகளும், பின்வரும் சந்ததியினருக்கு வளமான வாழ்க்கைத் தரமும் உருவாக, ஏழைகள் நிறைந்த ஒரு நாட்டில் இரண்டு துறைகள் சிறப்பாக கவனிக்கப்பட வேண்டும். அவை, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள். கல்வியில் சமச்சீர் எனும் திட்டத்தை தவறாக புரிந்து கொண்டு, கல்வியின் தரத்தை உயர்த்தாமல், எல்லா பாடத் திட்டங்களையும் சரிசமமாக்கி, தரமான கல்வியை அழித்தொழிக்கும் நடைமுறைகள் ஆரம்பமாகியுள்ளன.



சுகாதாரத்தைப் பொறுத்தவரை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அடித்தட்டு கிராம சுகாதார மையங்களை வலுப்படுத்தாமல், தனியார் மருத்துவமனைகளை வளப்படுத்தும் காப்பீட்டுத் திட்டத்தை அரசு ஊக்கப்படுத்துகிறது. கிராமப்புறங்களில் 2001ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி, 21 லட்சம் வீடுகள், "தற்காலம்' என பெயரிடப்படுகின்றனவாம். அவை கூரை மற்றும் மண் சுவர்களால் ஆன வீடுகளாம். அவற்றை நிலையான குடியிருப்புகளாக ஆறு வருடங்களில் மாற்றப் போவதாக, "கலைஞர் வீட்டு வசதி திட்டம்' அறிவிக்கிறது. இத்திட்டத்தில் ஒரு கூரை வீட்டிற்கு 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்; கான்ட்ராக்ட் கிடையாது; வீட்டின் சொந்தக்காரரே தனது வீட்டை கான்கிரீட் வீடாகக் கட்டிக்கொள்ள இத் தொகை வழங்கப்படுமாம். நடைமுறைக்கு ஒத்துவராத ஏட்டுச் சுரைக்காய் திட்டம் இது என்பதற்கு, இதை விட சிறந்த காரணம் கிடையாது. மத்திய அரசின் திட்டமான இந்திரா காந்தி குடியிருப்புத் திட்டத்தை பின்பற்றி இத்திட்டம் அமைக்கப்படுகிறது என்பதால், கட்டுமானப் பொருட்களை அரசின் ஊராட்சி அதிகாரிகள் வாங்கி, கூரை வீட்டு ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்ட அளிப்பார்களாம். இப்பொருட்கள் வாங்க கமிஷன் உண்டல்லவா?



அடுத்து பயனாளிகள் தேர்வு, ஓட்டு வங்கி முறையை பின்பற்றி அடிமட்ட கட்சித் தொண்டர்களால் நடத்தப்படுமா எனும் கேள்வி எழுகிறது. சமத்துவபுரம், காஸ் அடுப்புகள், கலர் "டிவி' வினியோகம் தந்த அனுபவப்படி, கீழ்மட்ட கட்சியினர் தயாரித்த பட்டியல்படி பயனாளிகள் தேர்வு இருக்கும் என, இப்போதே கிராமத்து மக்கள் முணுமுணுக்கின்றனர். எல்லாவற்றையும் விட, மூன்று ஆண்டுகளில் நடந்த இலவசங்களினாலான செலவுகள், நமது பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளதை மத்திய அரசு இந்த மாதம் வெளியிட்டுள்ள, "ஸ்டேட் டொமஸ்டிக் ப்ராடக்ட்' (குஈக) எனும் மாநில பொருளாதார வளர்ச்சி குறியீடு வெளிப்படுத்துகிறது.



இதற்கு முழுப் பொறுப்பும், வளர்ச்சித் திட்டங்களை வகுக்காமல், ஓட்டு வங்கி அரசியலுக்காக இலவசங்களை அள்ளித் தெளிக்கும் மாநில அரசே! இது பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல், வரும் நிதி ஆண்டில் 1,800 கோடி ரூபாயில் இலவச கான்கிரீட் வீடுகள், 400 கோடியில் நவீன சட்டசபை வளாகம், புதிய நூலகம் போன்றவற்றை உருவாக்குகின்றனர். "இப்படி நிறைய செலவுகளை செய்த பின்னர், அவைகள் சரியாக நடக்கின்றனவா என்பதை பற்றி விவாதித்து, குறைகளை திருத்துவதற்காகத்தான், மக்களுக்காக மக்கள் பணத்தில் இந்த நவீன சட்டசபை வளாகம் அமைக்கப்படுகிறது' என, ஜால்சாப்பு வேறு. கிராமப்புறங்களில் திட்டங்கள் நிறைவேறுவதை கிராமப்புறங்களில் நேரடியாக தணிக்கை செய்யாமல், சென்னையில் பளபளக்கும் நவீன அடுக்கு மாடிக் கட்டடங்களில் விவாதித்து மேற்பார்வையிடுவார்களாம். வாழ்க ஓட்டு வங்கி அரசியல்!



- என்.முருகன், சமூகவியலாளர், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி