Saturday, April 30, 2011

ரிவர்ஸ் கியரில் போகிறது தமிழ்நாடு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=233813

வளர்ச்சித் துறைகளில் தமிழகம், மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்து வந்துள்ளது. தொழில், விவசாயம் மற்றும் சேவைத் துறைகளில், தமிழகத்தின் வளர்ச்சி அதிகரித்து, மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருந்தது. காமராஜர் மற்றும் பக்தவத்சலம் முதல்வர்களாக இருந்த, 1950, 1960ம் ஆண்டுகளில், சி.சுப்ரமணியம் மற்றும் ரா.வெங்கடராமன் ஆகியோரின் சீரிய முயற்சியால், பல துறைகளில் இந்த மாநிலம் அதிவேக வளர்ச்சி பெற்றது. கடந்த, 1967ம் ஆண்டு தொடங்கிய திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், பொருளாதார வளர்ச்சிக்குக் கொடுத்த முக்கியத்துவம், வெகுவாகக் குறைந்து, அரசின் பெருவாரியான வருமானம், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமின்றி, விலை உயர்ந்த ஆடம்பரப் பொருட்களை இலவசமாக அளிப்பதில் செலவிடப்பட்டு வருகிறது.

வசதியற்ற, மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு இலவசங்களை அள்ளித் தருவதில், மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், வசதி படைத்தவர்கள் உள்ளிட்ட தமிழகத்தின், ஏழு கோடிக்கும் அதிகமான எல்லாத்தர மக்களுக்கும், இத்தகைய சலுகைகளை அளிப்பதன் மூலம், அரசின் மூலதனம் வீணாகிறது. இரண்டாவதாக, இத்தகைய மானியங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு ஊழல் மலிகிறது. உதாரணமாக, தி.மு.க., அரசின், ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டம். தமிழகத்தின் கணிசமான பகுதியினர், இந்த அரிசியை வாங்குவதில்லை. ஆனால், இத்தகைய அரிசி, எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுவதாக கணக்குக்காட்டி, அந்த அரிசி, கள்ள மார்க்கெட்டில் விற்கப்படுவதாக பரவலாக நம்பப்படுகிறது. ஒரு கோடியே, 60 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, இலவச கலர் "டிவி' பெட்டிகள் அளிக்கப்பட்டன. இது, கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள மொத்த குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை. இவர்கள் அனைவரும், மிக வறுமை நிலையில் உள்ளவர்களா அல்லது அனைவருக்கும் இலவசமாக, "டிவி' பெட்டிகள் தேவையா? இவற்றில் கணிசமான பகுதியினருக்கு, மின்சார வசதிக்கூட கிடையாது. இந்த, "டிவி' பெட்டியை இவர்கள் பெற்று என்ன செய்வர்? இதே முறையில், அரவை இயந்திரம், மிக்சி, மின் விசிறி போன்றவற்றையும் இலவசமாக அளிப்பதாக, திராவிடக் கட்சிகள், தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளன. இது பகுத்தறிவிற்கும், அரசியல் சாசனத்திற்கும் ஒவ்வாதது.

இந்த வழிமுறை, பரவலாக ஊழல் செய்வதற்கு வகை செய்கிறது. தேவையற்றவர்களுக்கும், இத்தகைய சாதனங்கள் கொடுத்ததாகக் கணக்கு காட்டப்படும். இலவச, "டிவி' பெட்டிகள் அளிப்பதற்கு, அரசுக்கு, 4,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு. இந்த தொகையில், 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் ஒன்று அமைக்கலாம். மின்பற்றாக்குறையால் அவதிப்படும் மக்களுக்கு, இந்த, 1,000 மெகாவாட் உற்பத்தி நீண்டகாலம் பலனை அளிக்கும். உலகெங்கிலும் மானிங்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழேயுள்ள மக்களுக்கும், செலவு செய்யக்கூடிய நிலையில் இல்லாத மக்களுக்கும், அத்தியாவசியத் தேவைப் பொருட்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்வதற்காக அளிக்கப்படுபவை. அரசியல் கட்சிகள், ஓட்டுகளைப் பெறுவதற்காக, இத்தகைய ஆடம்பரப் பொருட்களை இலவசமாக அளிப்பது வருந்தத்தக்கது.

கடந்த, 1989ம் ஆண்டு, விவசாயத்திற்கு இலவச மின்சாரம் அளிக்கும் திட்டம், தி.மு.க., அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த கால கட்டத்தில், அரசுக்கு இதனால், ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் செலவு. இந்த, 20 ஆண்டுகளில் இது, 20 மடங்காக அதிகரித்துள்ளது. இதனால், தண்ணீர் பற்றாக்குறை உள்ள தமிழ் மாநிலத்தில், நிலத்தடி நீர் பெருமளவில் இறைக்கப்பட்டு விரயமாகிறது. உபயோகிக்கப்படும் தண்ணீரில், 75 சதவீதத்திற்கும் மேல், விவசாய உற்பத்திக்கு செலவிடப்படுகிறது. இதில் பெரும் பகுதி வீணாக்கப்படுகிறது. வங்கதேசத்தில், இத்தகைய கட்டுப்பாடின்றி நீரை இறைத்ததன் மூலம், "ஆர்சனிக்' என்ற ரசாயனப் பொருள், நிலத்தடி நீருடன் கலந்து, கொடிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. சரி... இத்தகைய இலவச மின்சாரத்தின் மூலம், தமிழகத்தில் உணவு உற்பத்தி பெருகி உள்ளதா என்றால், இல்லை. கடந்த பல ஆண்டுகளில், உணவு உற்பத்தியில் தமிழகம், பின்னடைந்து வருகிறது. பசுமைப் புரட்சி ஆரம்பித்த காலகட்டத்தில், அதாவது, 1966-68ம் ஆண்டுகளில், தமிழகத்தின் உணவு உற்பத்தி, 59 லட்சம் டன். பஞ்சாப் மாநிலத்தில், இது, 41 லட்சம் டன்களாக இருந்தது. 40 ஆண்டுகளுக்கு பிறகு, 2009-10ம் ஆண்டில், பஞ்சாப் மாநிலத்தின் உணவு உற்பத்தி, 273 லட்சம் டன்கள். அதாவது, 6.5 மடங்குக்கும் அதிகம். தமிழகத்தில் இது, 80 லட்சம் டன்களாக மட்டுமே உயர்ந்துள்ளது. அதாவது, மூன்றில் ஒரு பங்கு, ஆண்டின் சராசரி உணவு உற்பத்தி 1 சதவீதத்திற்கும் குறைவு என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது, மக்கள் பெருக்கத்தின் உயர்வை விடக் குறைவு. இந்த, 40 ஆண்டுகளில், மாநிலத்தின் மொத்த வருமானத்தில், விவசாயத்தின் பங்கு வெகுவாகக் குறைந்து, இன்று 13-14 சதவீதமாக உள்ளது. ஆனால், விவசாயத்தை நம்பி வாழும் மக்கள், இன்னும் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகம். ஆகவே தான், பலவகையான இலவசத் திட்டங்கள் அளித்தாலும், விவசாயத்தை நம்பி கிராமப்புறங்களில் வாழும் பெருவாரியான மக்களுக்கு, பொருளாதார வளர்ச்சியால் பயன் கிட்டவில்லை. அரசு அலுவலர்கள், பெரிய தொழில் மற்றும் சேவை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வியாபாரிகள் போன்றவர்கள் மட்டுமே, 9 சதவீத பொருளாதார வளர்ச்சியால் பயனடைந்து வருகின்றனர்.

அரசு அடிப்படை கட்டுமான வசதிகளைப் பெருக்குவதில், சிறப்புக் கவனம் செலுத்தினால், தனி மனிதனின் உற்பத்தி திறனும், வருமானமும் பெருகும். வறுமை வெகுவாகக் குறைந்து, மானியங்களின் தேவை குறைந்துவிடும். இதற்கு அரசியல் கட்சிகள், அடுத்த, 10-20 ஆண்டுகளில், வளர்ச்சித் திட்டங்களில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். ஆனால், தமிழகத்தில் அரசியல் கட்சிகள், மிகக்குறுகிய கண்ணோட்டத்துடன், தேர்தல் நேரங்களில் இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க, நீண்டகால திட்டங்களைத் தீட்டுவதில் கவனம் செலுத்துவதில்லை. கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், ஆந்திர மாநிலம், தமிழகத்தை விட மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. அரசின் ஆண்டு வரி வருமானமும், திட்டச் செலவினங்களும், தமிழகத்தை விட, குறைவாக இருந்தன. இன்று, இது வெகு வேகமாக அதிகரித்து, மிக அதிகளவில் உள்ளது. நடப்பாண்டு, 2011-12 ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி, ஆந்திர மாநிலத்தின் வருவாய், 1 லட்சத்து, 995 கோடி ரூபாய். தமிழகத்தின் வருவாய், 79 ஆயிரத்து, 413 கோடி ரூபாய். இதேபோன்று திட்ட செலவினங்கள், ஆந்திர மாநிலத்தில், 47 ஆயிரத்து, 558 கோடி ரூபாய்; தமிழகத்தில் இது, 22 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே.

நிதி திட்டங்களுக்கும், மற்ற முக்கியமான செலவினங்களுக்கும், தமிழகத்தில் நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவு. ஏனெனில், திரட்டப்படும் நிதியில் பெருமளவு, அரசு ஊழியர்கள் சம்பளம், பென்ஷன், மானியம் மற்றும் பலவகை இலவசங்களுக்காக செலவிடப்படுகிறது; வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவது மிகக் குறைந்துள்ளது. ஆண்டுக்கு, 4,000 கோடி ரூபாய், இலவச மின்சார திட்டத்தின் மூலம், அரசும், தமிழ்நாடு மின்சார வாரியமும் செலவழித்து வருகின்றன. இந்த தொகையை கொண்டு, 1,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட ஒரு மின் நிலையத்தை, ஆண்டுதோறும் நிறுவ முடியும். அதாவது, ஐந்து ஆண்டுகளில் மட்டும், 5,000 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க முடியும். ஆனால், 1992ல் தொடங்கி, 2007ம் ஆண்டுவரை, மூன்று ஐந்தாண்டு திட்டங்களில், தமிழகத்தில் மிகச் சொற்ப அளவிலேயே மின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டது. இதன் விளைவு தான், இன்று நிலவும் மாநிலம் தழுவிய மின்பற்றாக்குறை. அடிப்படை வசதிகள் செய்து தர, அரசின் நிதி நிலையில் இடம் இல்லை. செய்யும் சில வளர்ச்சித் திட்டங்கள் கூட, அதிகளவில் கடன் பெற்றுத்தான் செயல்படுத்தப்படுகின்றன. அரசின் கடன் சுமை, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம். இதை சரிசெய்ய அரசு, சீரிய முயற்சி செய்யவில்லை. கடந்த, 2005-10ம் ஆண்டுகளில், தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு, 7.4 சதவீதம். இது, அகில இந்தியாவின் சராசரி வளர்ச்சி விகிதத்தை விட, 8.7 சதவீதம் குறைவு. குஜராத் 11.3, அரியானா 11, பீகார் 9.6, கர்நாடகம் 8.5, கேரளா 8.1, உத்திரகாண்ட் 7.8 என்ற அளவில் வளர்ச்சி விகிதம் உள்ளது. மேற்கண்ட மாநிலங்களின் வளர்ச்சி விகிதத்தை விட, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைவு. இலவசத் திட்டங்கள் இதே கதியில் தொடர்ந்தால், அடுத்து வரும் ஐந்தாண்டுகளின் வளர்ச்சி, இன்னும் சரிந்து, தமிழகம் ஒரு பின் தங்கிய மாநிலமாக ஆகக்கூடும். email:indecom@airtelmail.in

Tuesday, April 12, 2011

எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம்?


This came in dinamalar article comments
கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம் கொடுக்கப்படும் விகிதம் - 10 விநாடிக்கு ரூ.9700/- சன் டிவி க்கு – ரூ.23,474- தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல விளம்பரங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் வருவதைக் காண்கிறோம்.
சில விளம்பரங்கள் 3-4 நிமிடங்கள் அளவிற்கு கூடப் போகின்றன. இவை எல்லாம் சமூக நலன் கருதி வெளியிடப்படும் இலவச அரசு விளம்பரங்கள் என்றே பலரும் எண்ணி வந்தனர். அண்மைக் காலங்களில் அடிக்கடி வெளியிடப்படும் குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் விளம்பரங்களில் கலைஞரும், ஸ்டாலினும் பல நிமிடங்களுக்கு தொடர்ந்து காட்சி அளிக்கிறார்கள். அவர்களுக்கு புகழ்மாலைகள் சூட்டப்படுகின்றன. அரசு செலவில் இப்படி முதல்வரும், துணைமுதல்வரும் தற்புகழ்ச்சி செய்து கொள்வதே அருவருப்பாக இருக்கிறது. இத்தகைய விளம்பரங்களை திமுக தன் கட்சி செலவில் தயாரித்து வெளியிட்டால் யாரும் கேட்கப்போவதில்லை. அரசு செலவில் இத்தகைய விளம்பரங்கள் தயாரிக்கப்படுவதே அருவருப்பாக இருக்கிற நேரத்தில், இவை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தமிழக அரசால் காசு வேறு கொடுத்து ஒளிபரப்பப்படுகின்றன என்கிற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. 

இது குறித்து செய்தி ஒன்று – சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ.தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி- பதில்களின் விவரம் இன்று வெளியாகி இருக்கிறது. 

கேள்வி:— 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இது இலவச விளம்பரமா? அல்லது கட்டண விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்? 
பதில்:— 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம் அல்ல. கட்டண விளம்பரம்தான். ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ.23,474-ம், கலைஞர் டிவியில் ரூ.9,700-ம் செலுத்த வேண்டும் 

சன் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் - முதல்வரின் பேரன், அவர் மனைவி மற்றும் அவரது குடும்பத்து உறுப்பினர்கள். கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களில் - முதல்வரின் மகளும், சில அமைச்சர்கள் குடும்பத்தினரும் அடங்குவர். அரசாங்க விளம்பரங்கள் எந்த அடிப்படையில் இந்த தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கக்ப்படுகின்றன ? சன் தொலைக்காட்சி அதிகம் பேரால் பார்க்கப்படுவதால் விளம்பரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லலாம். சரி - கலைஞர் தொலைக்காட்சியை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் ? அதற்கு எப்படி அரசு விளம்பரத்தைக் கொடுத்தார்கள் ? 
இதில் விநோதம் என்னவென்றால் - அரசு தொலைக்காட்சியான பொதிகையில் இத்தகைய அரசு விளம்பரங்கள் வெளியாவதே இல்லை ! (அங்கு காசு கொடுத்தால் அது தன் குடும்பத்திற்கு எப்படி போகும் ?) 
அரசாங்க பணத்தில் முதல்வர் குடும்பத்து தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் கொடுப்பது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா ? எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்கிற போக்கில் செயல்படுவது சரியா? மிகுந்த சிரமத்திற்கிடையே இத்தகைய தகவல்களை வெளிக்கொண்டு வந்த திரு வி.சந்தானம் அவர்களைப் பாராட்டுவதும், இவற்றை அதிக அளவில் பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு போவதும் நம் கடமை

Vote for MSK

Greetings! 
Nothing is for Free….  Is it not ironic to be happy to get free TV worth of Rs 2400 while paying 1.75 lakh crore rupees to the politician for whom you cast your vote. 

Politicians who buy your vote today, will sell you tomorrow.


A bunch of like minded social activists who are in thirst of scam free politics, came together to form cleanest politics through MAKKAL SAKTHI KACHI. 
The magic wand for change is Vote and it is in your hands. Use it right and VOTE FOR MAKKAL SAKTHI KATCHI


Facebook Page for Makkal Sakthi Katchi:
   
 

MSK - Coimbatore


MSK - Chennai


Think And Vote


அரசியலை நாம் ஏன் போது இடங்களில் பேசுவதில்லை?

"ஜீரோ' ரூபாய் நோட்டைக்கொடுத்து ஓட்டு சேகரிக்கும் வேட்பாளர்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=221662

தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதியில் மக்கள் சக்தி கட்சி சார்பில் "விசில்' சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஆதிநாராயணன், வாக்காளர்களிடம் ஜீரோ ரூபாய் நோட்டைக்கொடுத்து, ஓட்டு சேகரித்துவருகிறார். ஊழல் ஒழித்து நல்லாட்சி அமைப்போம், நமது ஓட்டு விற்பனைக்கு அல்ல, தன்மானம் இழப்பதற்கு அல்ல என்ற வாசகங்களுடன், கலர் பேப்பரில் காந்தி படத்துடன் அச்சடிக்கப்பட்ட மதிப்பில்லாத ஜீரோ ரூபாய் நோட்டை(நிஜ ரூபாய் போல தோற்றம் கொண்டது) வாக்காளர்களிடம் தந்து ஓட்டு கேட்கிறார். தன்னை தேர்ந்தெடுத்தால் மது, லஞ்ச- ஊழலை ஒழித்து, கிராம சுயாட்சி, தரமான கல்வி, மருத்துவம் போன்றவற்றை தருவதாக வாக்குறுதியளித்துவருகிறார். இவரின் வித்தியாச பிரசாரம், வாக்காளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

ஒளி மிகு தமிழம் ஒளிர முதல் அடி உங்களுடையதாக இருக்கட்டும் - குரு

அன்புடையீர்., வரும் தமிழக சட்டசபை தேர்தலுக்குப்பின், வரும் ஆட்சி எப்படி அமைய வேண்டும் என்பதைவிட, எப்படிப்பட்டவர்கள் ஆட்சி தமிழகத்து நல்லது என தயவு செய்து ஆழமாக சிந்திப்பீர்..! அதற்கேற்ப ஓட்டை பயன்படுத்துவீர்...!!!

இப்போதைய தி.மு.க. கழக ஆட்சி வெறும் இலவசங்களை நம்பி களத்தில் இறங்கி உள்ளது. இதையே கடந்த கால சாதனையாக கூறி மகிழ்கிறது.இது சாதனையா? வேதனையா? கல்வி அறிவற்ற பாமரர்களும் விபரீதம் அறியாமல் இலவசங்களுக்கு மயங்கி, தங்கள் வாக்கை அடகு வைத்து, தமிகழத்தையும் அடகு வைக்கிறார்கள்.

இலவ்ச - தொலைகாட்சி பெட்டி, மின் மோட்டார்கள், நிலங்கள், காப்பீடு என்று போய், மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாவரைக்கும் மிஷின்,(Grinder), மிக்ஸி, வாசிங் மெஷின், ஃப்ரிட்ஜ் எல்லாம் தருவோம் என் தி.மு.கவும்.,

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நலிந்தவருக்கு, 4  ஆடுகளும், மாடுகளும் கால்நடை வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையிலும், ரேஷன் கார்டு பயனாளிகள் அனைவருக்கும் 20 கிலோ அரிசியும், நலிந்தவரிகளின் திருமணத்துக்கு,  4 கிராம் தங்கத்தாலி  மற்றும் ரூ. 50000 இலவசமாக,தரப்படும் என்றும் அ.தி,மு.கவும் தமிழக மக்களை மூளை சலவை செய்கின்றனர்.

இன்றைய நிலையில், தமிழக களஞ்சியம் காலி. கஜானவும் சுரண்டப்பட்டுவிட்ட்து. மேலும்,  மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பு வரைக்கும் சென்று கடனை, தமிழகம் வாங்கி விட்டது. இனி இந்த 2 கழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகம் சந்திக்கப் போவது என்னமோ அழிவு என்பது மட்டும் நிச்சயம்.

ஏன் இந்த இரு கழகத்தை மட்டுமே  மாற்றி மாற்றி ஆட்சியில் அமர்த்த வேண்டும். இலவசம் எத்தனை நாளைக்கு தந்து கொண்டே இருக்க முடியும்? கடைசி ஏழை இருக்கும் வரை இலவசம் தொடரும் என்று கலைஞ்ர் முழக்கம் இடுகிறாரே. இது சாத்தியமா? கடைசி ஏழை வரைக்கும் இலவசம் கொடுத்தால், வறுமை போய் விடுமா? .உண்மையில் இது இவருக்கு தமிழகத்தின் மேலுள்ள வளர்ச்சியில் அக்கறையா? பதவி சுகம், அதிகாரம் தரும் போதை மயக்கம் போய் விடக் கூடாது என்ற ஆற்றாமையா?   

அதிமுகவும் இந்த வரிசையில் தானே உள்ளது....தயவு செய்து சிந்திப்பீர் என இதையெல்லாம் உங்களுக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் நீங்கள் சொல்லலாமே..!!!

உ.பி, & கர்நாடகாவைத் தவிர, இன்றைய மாற்று எதிர்க்கட்சி ரொம்ப திறமையாக இல்லாவிட்டாலும், தமிழகம் போல் எந்த வளர்ச்சிப்பணியும் பெரிய அளவில் நடைபெறாமல் சூரையாடப்படவில்லையே என்ற உண்மையை நீங்கள் நம்பினால், இதையெல்லாம் உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் சொல்லலாமே..!!!

குஜராத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு இலவசம் இல்லை. முதலீடுகள் பெருகுகின்றன். வளர்ச்சி திட்டம் பெருமளவில் செயல்படுத்தப்படுகின்றன. தடையற்ற மின்சாரம். இந்தியாவின் முன்மாதிரியான ஒரு மாநிலமாக திகழ்கிறது.. பஞ்சாபிலும் இதே நிலைதான். 

நான் இந்த கட்சிக்கு என்று ஒரு சார்பாக ஒட்டு போடசொல்லி கேட்கவில்லை. ஆனால், இரு கழகத்தையும்  தவிர்த்து, உண்மையிலேயே ஓரளவு சுமாரனவர்களாகப் பார்த்து அவர்களுக்கு உங்கள் வாக்கைப் பயன்படுத்தலாமே என்று நீங்கள் உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு சொல்லாமே..அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை என்று சொன்னால், இருக்கிறது இந்த கட்சி, இந்த சின்னம்  என்று அவர்களுக்கு சொல்லி புரிய வைக்க நீங்கள் நாட்டுக்காக செய்யும் ஒரு தொண்டாய் இதை செய்யலாமே.

அரசியல் நமக்கு வேண்டாம். ஊழலும், லஞ்ச லாவண்யமும், சுயநலமும் ஓங்கி புரையோடிபோய்விட்ட அரசியல் சாக்கடையை சுத்தம் பண்ணுவது என்பது முடியக்கூடிய காரியமா? என ஒவ்வொருவரும் எனக்கென்ன வந்தது? யாரும் யாரையும் மாத்த முடியாது என்று இருந்தால், என்றுதான் இதற்கு விடிவுதான் எப்போது?  பொறுப்பற்ற முறையில் அலட்சியமாய் இருப்பதும் நாட்டுக்கு செய்யும் பெரும் துரோகம் அல்லவா? அறியாதவர்களுக்கு, அறிந்தவர்கள் புரியவைக்கப்போவதுதான் எப்போது? கற்றதனால் ஆன பயந்தான் என்ன? எல்லோரும் இதேபோல் முன்பு பல தியாகிகள் நினைத்திருந்தால்,இன்று சுதந்தர பாரதம் மலர்ந்திருக்குமா? மலர்ந்த பாரதம் வாடுவதினால், உண்மையான தியாகிகளின் முயற்சி அனைத்தும் வியர்த்தம் ஆவதற்கு நாம் உடந்தையாய் இருக்கலாமா?

எல்லாக் கொள்ளிக்கட்டையும் ஒன்றுதான் என்று இல்லாமல், எரியும் கொள்ளிக்கட்டையில், அதிகம் பாதிப்பு இல்லாத கொள்ளிக்கட்டை எது என இப்போதைக்கு பார்த்து, நம் தமிழகத்துக்கு நல்லது செய்ய எத்தனிப்போம். உங்கள் வாக்கை மட்டுமல்ல உங்களைச் சுற்றி உள்ளவர்களும் அவ்வாறே செய்ய நீங்கள் ஓரளவேனும் ஒரு அடி எடுத்து வைத்தால் அதுவே புரையோடிப்போன சீழ் மேலும் மோசமாகாமலாவது இருக்க.,  இன்றைய கால கட்டத்துக்கு செய்யும் ஒரு சிறு முதல் உதவியாகும். காலப்போக்கில் பொறுப்புள்ள ஒவ்வொரு பிரஜையாலும், பொறுப்பற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க, முதல் புள்ளியை நீங்கள் எடுத்து வைப்பதாக இருக்கட்டும்...

இலவசங்கள் வேண்டாம், நாட்டின் இறையாண்மையை அடகு வைக்க வேண்டாம். 

ஒளிமிகுதமிழம்ஒளிரமுதல்அடிஎடுத்துவைங்கள்.பொறுப்புள்ள ஒவ்வொரு இந்தியனாலும் பாரதமும் தானாக உலக அரங்கில் முன்னிற்கும். 

பல பணிகள் உங்களுக்கு, உண்மைதான். ஆனால் அதை நாம் வேறு நாட்டிலா இருந்துகொண்டு    செய்கிறோம். நம் வீட்டில் ஒரு பிரச்சனை என்றால், உடனே எல்லாவற்றையும் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு, இதில் கவனம் செலுத்துவதுபோல்,இதையும் நாட்டுக்காக செய்ய முன்வரலாம். அதுவும் முடியவில்லையா? குறைந்த பட்சம் இந்த மெயிலையாவது உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் forward பண்ணுங்கள். ஒரு பொறி போதும்..விடியல் ஏற்பட !!!

ஆகவே., தயவு செய்து இக்கட்டுரையின் முதல் பாராவை மீண்டும் ஒரு முறை படியுங்கள்.

எழுத்தாக்கம்
குருமூர்த்தி

லஞ்சத்தை வேரோடு அறுக்க, மக்களுக்கு பயிற்சி: மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் உறுதி


கோவை: மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் 36 பேரும், தேர்தலில் வெற்றி தோல்வியை பொருட்படுத்தாமல், எம்.எல்.ஏ.,வாகவோ அல்லது நிழல் எம்.எல்.ஏ.,வாக (தோல்வியுறும்பட்சத்தில்) செயல்படுதல்; தேர்தல் அறிவிப்பு நாளில் இருந்து இன்று வரை, வாக்காளர்களுக்கு பணம், மது வழங்கவில்லை, இனியும் வழங்க மாட்டோம்; ஊழலால் பாதிக்கப்பட்டவருக்கு தகுந்த நீதிக்காக பாடுபடுதல்; லஞ்சம் எனும் கொடிய நோயினை வேரோடு அறுக்க, மக்களுக்கு பயிற்சிகளை வழங்குதல்; மக்கள் பிரச்னைகளுக்கு சட்ட விழிப்புணர்வு முயற்சிகளை தன்னார்வ ரீதியில் அணுகி, தீர்வு கிடைக்கச் செய்தல் ஆகிய உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென, மக்கள் சக்தி என்னும் கட்சி தேர்தல் களத்தில் குதித்தது. தமிழகத்தில் 36 வேட்பாளர்களில், கோவையில் 6 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு, நேற்று பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில், பொதுமக்களும் பங்கேற்றனர். இதில், மக்கள் சக்தி வேட்பாளர்கள் ஆறு பேரும் பொதுமக்கள் முன்னிலையில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் 36 பேரும், தேர்தலில் வெற்றி தோல்வியை பொருட்படுத்தாமல், எம்.எல்.ஏ.,வாகவோ அல்லது நிழல் எம்.எல்.ஏ.,வாக (தோல்வியுறும்பட்சத்தில்) செயல்படுதல்; தேர்தல் அறிவிப்பு நாளில் இருந்து இன்று வரை, வாக்காளர்களுக்கு பணம், மது வழங்கவில்லை, இனியும் வழங்க மாட்டோம்; ஊழலால் பாதிக்கப்பட்டவருக்கு தகுந்த நீதிக்காக பாடுபடுதல்; லஞ்சம் எனும் கொடிய நோயினை வேரோடு அறுக்க, மக்களுக்கு பயிற்சிகளை வழங்குதல்; மக்கள் பிரச்னைகளுக்கு சட்ட விழிப்புணர்வு முயற்சிகளை தன்னார்வ ரீதியில் அணுகி, தீர்வு கிடைக்கச் செய்தல் ஆகிய உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

கூட்டத்திற்கு தலைமை வகித்த, கட்சியின் மாநில தலைமைக் குழு உறுப்பினர் மற்றும் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் விஜய்ஆனந்த் பேசியது: வெற்றி தோல்வியை கருத்தில் கொள்ளாமல், வரும் 14ம் தேதி முதல் எம்.எல்.ஏ., போன்று செயல்படுவோம். பிரசாரத்தை வெற்றிகரமாக, புதுமையான அணுகுமுறையில் இருந்தது. எங்கள் வேட்பாளர்கள் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுபடவில்லை. இதை தேர்தல் கமிஷன் மற்றும் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். வரும் நாட்களிலும் கடமை உணர்வோடு, கட்டுப்பாடுடன் நடப்போம். எம்.எல்.ஏ., பொறுப்பேற்றவுடன், திட்டங்களை முழுமையாகக் கொண்டு செல்வோம். சட்டசபைக்கு வெளியில் இருந்தாலும், எம்.எல்.ஏ., போன்று மக்கள் பிரச்னையில் பங்கேற்போம், என்றார்.

கிணத்துக்கடவு வேட்பாளர் இளங்கோ கூறுகையில், ""எங்களது நோக்கம் தனிப்பட்டவரை தாக்குவதல்ல; நல்லது செய்ய வேண்டும். கல்வித்தரம் குறைந்து வருகிறது. எட்டாம் வகுப்பு வரை பாஸ் என்பது தவறான ஒன்று; இது எந்த நாட்டிலும் இல்லை. இலவசங்களை கண்டு ஏமாறக்கூடாது'' என்றார்.

கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் துரைராஜ் பேசுகையில், ""ஒவ்வொரு வேட்பாளர்களையும் சந்தித்தோம். இரு கூட்டணிக்கும் எதிரான உணர்வினை மக்கள் வெளிப்படுத்துகின்றனர். பிரசாரத்தின் போது ஒரு பெரியவரை சந்தித்தேன்; எங்களது கொள்கையை கேட்டுக் கொண்டு என்னிடம் "காமராஜருக்கு பிறகு, 30 ஆண்டுகளாக நான் வேறு யாருக்கும் ஓட்டளிக்கவில்லை; உன்னை தலைவனாக ஏற்றுக்கொண்டு ஓட்டளிக்கிறேன்'' என்றார்.

இதை சொல்லி முடிப்பதற்குள், எங்கள் மீது இப்படி நம்பிக்கை வைத்திருக்கிறார்களே என்று துரைராஜ் விக்கிவிக்கி அழுதார். தொடர்ந்து பேச முடியாதவாறு, மக்களின் மீதுள்ள உண்மையான பாசம், அவரது தொண்டையை அடைத்தது. கூட்டத்தில் இருந்த அனைவரது மனதையும் நெருடியது. தொடர்ந்து இதர வேட்பாளர்கள் தங்களது கருத்துகளை கூறினர்