Sunday, March 20, 2011

ஏய்!தலை வணங்கா தமிழினமே!வந்தாரையே வாழ வைக்கும் நமக்கு ஏன் வேண்டும் இலவசம்?


முல்லைக்கொடி படர்வதர்க்கே தேர் தந்த பாரி வேந்தன் வழி வந்த நமக்கு கொடுத்துதான் வழக்கமே தவிர இலவசமாய் வாங்கி வழக்கமில்லை!


மயிலுக்கும் போர்வை தந்து,உயிர் காக்கும் நெல்லிக்கனியைக் கூட பிறருக்கு கொடுத்து புளகாங்கிதம் அடையும் மன்னன் வழி வந்த நமக்கு இலவசத்தை வாங்க கரங்களும்,மனமும் கூச வேண்டாமா?


தமிழ்,தமிழன் என தூண்டி விட்டு நம் தேசிய மொழியைக் கூட கற்க விடாமல் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட விட்டு விட்டு கைக்கெட்டும் தூரத்தில் நம் தமிழினம் செத்து மடிந்தபோது தமிழுணர்வு பதவி என்னும் நாற்காலிக்குக் கீழே நசுக்கப் பட்டதே!


நயவஞ்சகர்களின் விஷம் தடவிய நாக்குகள் தேனொழுக பேசி பேசியே ஆட்சியை பிடித்து தமிழினத்தை அடிமை கொண்டதே!


வீரம்,விவேகம்,பண்பாடு,கொடை ஒருங்கே அமையப் பெற்ற எட்டுதிக்கும் கொடி நாட்டிய எம் தமிழினம்,உழைப்பு ஒன்றையே மூலதனமாக கொண்ட எம் தமிழினம் இலவசத்தை ஏற்கலாமா?


யாரோ சில கொடியவர்கள் பட்டு மஞ்சத்திலும்,செல்வ செழிப்பிலும் புரள்வதற்கு,உழைக்காமல் உண்டு கொழுப்பதர்க்கு எம் தமிழர்களை பகடைக்காயாக்கி இலவசம் எனும் சேற்றை நம் மீது பூசி பிச்சைக்காரன் வேஷம் போட நினைக்கின்றனர்! 


பிச்சையின் மறு பெயர்தான் இலவசம்!


எனவே இலவசத்தை நாம் ஆதரித்தால் பிச்சைக்காரனின் மறுபெயர் தமிழன் என நாளைய சரித்திரம் சொல்லும்!


நம் சரித்திரத்தையே மாற்றியமைக்கும் இந்த அரசியல் தரித்திரங்களின் தலைஎழுத்தை மாற்றி எழுதுவோம்!


இலவசத்தை வெறுப்போம்!இலவசத்தை வேரோடு சாய்ப்போம்!உழைப்போம்!வெற்றி பெறுவோம்! 


இலவசங்களை கொடுத்து நம்மை பிச்சைகாரராய் மாற்றிய மன்னராட்சி புரியும் மு க அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நிச்சயம் தங்க திருவோடு இலவசமாய் கொடுத்து அதில் நமக்கு பிச்சை போடுவார் என்பது நிச்சயம்.


இனியும் நாம் இலவசங்களுகாக ஓட்டு போடுவோமானால் நமது சந்ததி நிச்சயம் உலக மகா சோம்பேறிகளாக ஆவதை யாராலும் தடுக்க முடியாது. 


இலவச டிவி, அரிசி,கொடுத்தவர் அதனுடன் சோம்பல் யனும் நோய்யும் பரிசாக கொடுத்துள்ளார்.


இந்த நோயை மென்மேலும் வளர்க்க அணைத்து அரசியல் கட்சிகளும் ஆவலுடன் உள்ளன.


அதை இந்த ஒரு வாரமாக நடந்து வரும் கூட்டணி பேரம் நமக்கு நெற்றிபோட்டில் சம்மட்டி கொண்டு அடித்தது போல் உணர்திள்ளது. ஏன் இவ்வளவு போட்டி? 


மக்களுக்கு நல்லது செய்வத்ர்க்காவாக? இத்தனை பேர் சேர்ந்து ஆட்சி அமைப்பது அவர்கள் சொத்து சேர்க்கவே தவிர மக்களுக்கு நன்மை செய்ய இல்லை என்பது கடந்த ஆட்சி தலைவர்கள் நிருபித்துள்ளனர்.


அவர்கள் மேல் உள்ள ஊழல் வழக்கு பல இன்னும் நிலுவையில் இறுக்க அந்த ஊழல் முகத்தை மறைக்க தேர்தல் வாக்குறுதி என்னும் முகமூடி அணிந்து வருபவர்களை அடையாளம் காண தெரியாத பாமர மக்களின் கூட்டத்தில் ஒருவனாக இருப்பதை தவிர வேறு யன்ன செய்ய முடியும் நம்மால்.தெரிந்தால் கூறுங்கள் மக்களே . 


கையாலகாத மக்களில் ஒருவன் . நன்றி


The above comments is from Dinamalar... There is party to change all these things... New politics for New Generation : Makkalsakthi Katchi

No comments:

Post a Comment